கோலாலம்பூர், டிச.5-

மலேசிய நாடாளுமன்றம் 60 ஆண்டுகளை கடந்த நிலையில் நாட்டின் மேம்பாட்டிற்கும், வலப்பத்திற்கும்  மக்கள் நலத்திற்கும் மக்களவையும் மேலவையும் முக்கியப் பங்காற்றியுள்ளதாக மேலவைத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் வர்ணித்துள்ளார்.

மலேசிய நாடாளுமன்றம் கடந்த 1962இல் 1 கோடியே 80 வெள்ளி செலவில் கட்டப்பட்டுள்ளது. இதன்  முதல் கூட்டம் டேவான் துங்கு அப்துல் ரஹ்மான் மண்டபத்தில் நடைபெற்றது. இந்த நாடாளுமன்றம் 60 ஆண்டுகளில் பல வரலாறுகளை சந்தித்துள்ளதாக டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

மலேசிய நாடாளுமன்றத்தின் 60 ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு நாடாளுமன்றத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றுகையில் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஷ்வரன் இவ்வாறு பேசினார். இந்த நிகழ்வில் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முக்மட், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர், செனட்டர்கள் கலந்து கொண்டனர்.

இந்த நாடாளுமன்றத்தில் 1963இல் மலேசிய அமைப்பு சட்ட மசோதா இயற்றப்பட்ட வரலாறு நிகழ்ந்துள்ளது. சிங்கப்பூர் மலேசியாவில் இருந்து பிரிந்த சட்ட மசோதாவும் இங்குதான் நிகழ்ந்துள்ளது என்று டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் சொன்னார்.

மக்களவையைப் போலவே மேலவையும் மேலவையும் பல வரலாறுகளை பதிவ செய்துள்ளது. கடந்த 12.9.1959இல் முதல் மேலவை கூட்டம் நடைபெற்றது. அன்று தொடங்கி இன்று வரையில் மக்கள் நலனுக்காக பேசும் ஒரு தலமாக மலேசிய நாடாளுமன்றம் 60 ஆண்டுகளை கடந்துள்ளதாக டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் குறிப்பிட்டார்.

இந்த 60 ஆண்டுகளில் மேலவையை ரத்து செய்ய வேண்டும் என்று கடந்த 60 ஆண்டுகளாக பல தரப்பினர் வலியுறுத்தி வந்தாலும்கூட மக்கள் நலனுக்காக மக்கள் பிரச்சினைகளை அலசி ஆராயும் ஒரு இடமாக மலேசிய மேலவை திகழ்ந்து வருவதாக டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் பாராட்டினார்.

இந்த 60 ஆண்டுகளில் மலேசிய நாடாளுமன்றம் பல வரலாறுகளை சந்தித்துள்ளது. இந்த வரலாற்றுப் பதிவுகளை சந்திக்க உதவிய அனைத்துத் தரப்பினருக்கும் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் தமதுரையில் நன்றி தெரிவித்துக் கொண்டார்.