செவ்வாய்க்கிழமை, ஜனவரி 21, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > குற்றவியல் > சொஸ்மாவில் கைது செய்யப்பட்ட சுப்ரமணியம் துன்புறுத்தலா?
குற்றவியல்சமூகம்முதன்மைச் செய்திகள்

சொஸ்மாவில் கைது செய்யப்பட்ட சுப்ரமணியம் துன்புறுத்தலா?

கோலாலம்பூர், டிசம்பர் 5-

ரத்தக் கறை படிந்த அறையிலும் முட்கள் நிறைந்த காட்டுப் பகுதியிலும் தான் தள்ளப்படுவேன் என்று தனக்கு மிரட்டல் விடுக்கப்பட்டதாக விடுதலைப் புலி இயக்கத்துடன் தொடர்புடையதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட பி.சுப்ரமணியம்  தெரிவித்தார்.

மனோ ரீதியிலான துன்புறுத்தலுக்கு கடந்த 21 நாட்கள் சொஸ்மா தடுப்பு காவலில் இருந்தபோது தாம் அனுபவித்ததாக ஒரு வர்த்தகரான சுப்ரமணியம் கூறினார்.

இன்று கோலாலம்பூர் செக்ஷன் நீதிமன்ற நீதிபதி அசூரா அல்வி இந்தப் புகாரை பதிவு செய்தார்.

சீருடைய அணியாத அதிகாரிகள் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின்போது அவர்கள் தனக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தியதாக அவர் தெரிவித்தார்.

அந்த விசாரணையில், ஒரு அதிகாரி தண்ணீர்  போத்தலை உதைத்ததாகவும் இதர அதிகாரிகள் புகைப்பிடித்துக் கொண்டே குறிப்புகளை எழுதிக் கொண்டிருந்ததாகவும் அவர் கூறினார்.

‘’நாங்கள்தான் இங்கு ராஜா, உனது பணியாளர்கள் கிடையாது’’. அருகில் இருக்கும் ரத்தக் கறை படிந்த அறையில் தள்ளப்படுவாய் என மிரட்டியதாகவும் அவர் கூறினார்.

அதோடு, அடித்து துன்புறுத்தி காட்டில் எறியப்பட்டவர்களை பற்றி கேள்விப்பட்டது உண்டா? என்றும் அவர்கள் கேட்டதாகவும் சொன்னார்.

அந்த அறையில் புகைப்பிடித்ததால் தனக்கு மூச்சு தினறல் ஏற்பட்டதாகவும் அவர் நீதிபதியிடம் தெரிவித்தார்.

அதிகாரி ஒருவர் ஒரு ஆவணத்தை காலால் மிதித்த வண்ணம், இந்த ஆவணத்தில் கையெழுத்திட மறுத்தால் சிறையில் அடைப்படுவாய் என்று மிரட்டியதாகவும் சுப்ரமணியம் சொன்னார்.

இந்த விசாரணையின் போது யாரும் தன்னை அடித்ததில்லை என்றும் விடுதலை புலிகள் இயக்கத்துடன் தொடர்பு இருப்பதாக ஒப்புக்கொள்ளும்படி மனோ ரீதியில் துன்புறுத்தியதாக  அவர் கூறினார்.

சுப்ரமணியத்தின் புகார் இன்று பதிவு செய்யப்பட்டது. இவரை போன்றே விடுதலை புலிகள் இயக்கத்துடன் தொடர்புதாக குற்றச்சாட்டப்பட்ட கலைமுகிலனிடமும் நாளை புகார் பதிவு செய்யப்படும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன