செவ்வாய்க்கிழமை, ஜனவரி 21, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > அன்வாரைத் தற்காத்து பேசிய அஸ்மின் அலி
அரசியல்முதன்மைச் செய்திகள்

அன்வாரைத் தற்காத்து பேசிய அஸ்மின் அலி

ஆயெர் கெரோ, டிச.6-

பி.கே.ஆரின் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மீது பயனீட்டாளர் சங்கத்தைச் சேர்ந்த பிரபல சமூக ஆர்வலரின் பேரன், பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்துள்ள நிலையில், அன்வாரைத் தற்காத்து பேசியுள்ளார் அக்கட்சியின் துணைத் தலைவரான டத்தோஸ்ரீ அஸ்மின் அலி.

அக்குற்றச்சாட்டு ஒரு இழிவான நடவடிக்கையாகும், நன்னெறி அற்றது. அத்தகைய இழிவான அரசியலை பி.கே.ஆரின் உயர்மட்ட தலைமைத்துவம் நிராகரிப்பதாகவும் அஸ்மின் அலி கூறியுள்ளார்.

சம்பந்தப்பட்ட குற்றச்சாட்டு குறித்து அன்வார் விளக்கமளித்து விட்டார். அவருடன் இணக்கப் போக்கைக் கொண்டிருக்காதவர்கள், ஆரோக்கியமான முறையில், தங்களது வாதங்களையும் பரிந்துரைகளையும் முன்வைக்க வேண்டும். மாறாக, இழிவான செயல் வாயிலாக அல்ல என வியாழக்கிழமை மலாக்கா அனைத்துலக வாணிப மையத்தில் பி.கே.ஆரின் இளைஞர் மற்றும் மகளிர் பிரிவுகளின் மாநாட்டைத் தொடக்கி வைத்த பிறகு செய்தியாளர்களிடன் பேசிய அஸ்மின் அலி அக்கூற்றை முன்வைத்துள்ளார்.

இதற்கு முன்பு, அன்வாரின் முன்னாள் உதவியாளரான 26 வயதுடைய முஹம்மட் யூசோப் ராவ்த்தர் எனப்படும் அந்த இளைஞர், அன்வார் தம் மீது இழிவான முறையில் பாலியல் துன்புறுத்தலைப் புரிந்ததாக குற்றம் சாட்டியிருந்தார்.

அக்குற்றச்சாட்டை மறுத்திருந்த அன்வார், தனது பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தும் நோக்கிலே அக்குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருப்பதாகவும் அது தொடர்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டிருப்பதாகவும் கூறியிருந்தார்.

மேலும், தனது வழக்கறிஞரான ராம்கர்ப்பால் சிங், அந்த இளைஞரிடம் விளக்கம் கேட்டு அல்லது அவதூறு வழக்கைத் தொடுப்பதற்காக நோட்டிஸையும் வழங்கியிருப்பதாகவும் அன்வார் குறிப்பிட்டிருந்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன