Homeமலேசியாஇறுதி வரை போராடுங்கள் - கைரி ஜமாலுடின் 

இறுதி வரை போராடுங்கள் – கைரி ஜமாலுடின் 

கோலாலம்பூர், ஆக.28 –  

2017  சீ விளையாட்டுப் போட்டியில் தேசிய கால்பந்து அணி தங்கப் பதக்கத்தை வெல்ல இறுதி வரை போராட வேண்டும் என இளைஞர், விளையாட்டு அமைச்சர் கைரி ஜமாலுடின் கேட்டு கொண்டுள்ளார்.

இந்த கோரிக்கை ஒரு நெருக்குதல் அல்ல. மாறாக மலேசியாவின் 60 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு மலேசியர்கள் எதிர்பார்க்கும் ஒரு பரிசு என கைரி தெரிவித்தார். ஷா ஆலாம் அரங்கில் நாளை இரவு மணி 8.45  கால்பந்து போட்டியின் இறுதி ஆட்ட்ம நடைபெறவுள்ளது.

இந்த ஆட்டத்தில் மலேசியா, நடப்பு வெற்றியாளரான தாய்லாந்தை எதிர்கொள்ளவுள்ளது. மலேசிய அணி ஆட்டத்தை ரசித்து விளையாடும் அதேவேளையில் தங்கப் பதக்கத்தை வெல்வதற்கும் போராட வேண்டும் என கைரி கேட்டு கொண்டார்.

ஆக கடைசியாக 2011 ஆம் ஆண்டில் மலேசிய கால்பந்து அணி சீ விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்றது.

 

spot_img

latest articles

explore more