Homeமலேசியாகெட்கோ: ம.இ.கா. தலைவி வசூலித்த எங்கள் பணம் எங்கே?

கெட்கோ: ம.இ.கா. தலைவி வசூலித்த எங்கள் பணம் எங்கே?

புத்ராஜெயா, ஆக.28-
கெட்கோ நிலத்தை வாங்கித் தருவதாக கூறி எங்களிடமிருந்து 20 லட்சம் வரை பணத்தை வசூல் செய்து ஏமாற்றிய ம.இ.கா. ஜெலுபு தொகுதியின் முன்னாள் தலைவிக்கு எதிராக கெட்கோ குடியிருப்பாளர்களில் ஒரு பகுதியினர் மலேசிய லஞ்ச ஒழிப்பு ஆணையத்தில் (எஸ்.பி.ஆர்.எம்) இன்று புகார் அளித்தனர்.

சம்பந்தப்பட்ட ம.இ.கா. தலைவிக்கு எதிராக காலை மணி 11.30 அளவில் புத்ராஜெயாவிலுள்ள லஞ்ச ஒழிப்பு ஆணையத்தில் ஒன்று திரண்ட அவர்கள் அனைவரும் அந்த முன்னாள் ம.இ.கா. தலைவிக்கு எதிரான பதாகைகளை ஏந்தியிருந்ததோடு தங்களின் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.

தொடர்ந்து, அக்குடியிருப்பாளர்களின் சார்பில் எஸ்.பி.ஆர்.எம். அதிகாரியைச் சந்தித்த ஆர்.பாப்பையா, கே.ராமசாமி, ஏ.ராஜகோபாலு, சொமிருடின் பின் முஹமட் அலி ஆகியோர் இந்த புகாரை அளித்தனர்.

நேற்று கெட்கோ நிலக்குடியேற்ற பகுதிக்கு எஸ்.பி.ஆர்.எம்.மின் இயக்குநர் வருகை புரிந்தார். அவருடன் இதுநாள் வரையில் எங்களை சந்திக்காத அந்த ம.இ.கா. தலைவியும் காணப்பட்டார். இது எங்களுக்கு பெரிய சந்தேகத்தை ஏற்படுத்தியது.

எங்களுக்கு கெட்கோ நில பகுதியை வாங்கி கொடுப்பதாக கூறி கம்போங் கெட்கோ நடவடிக்கை குழுவின் மூலம் அவர் வசூல் செய்த பணம் என்னவானது? என்பது குறித்து இன்று வரையில் எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. இது குறித்து எஸ்.பி.ஆர்.எம். முழுமையான விசாரணையை மேற்கொள்ள வேண்டுமென எங்களின் புகாரில் நாங்கள் கூறியிருப்பதாக அவர்கள் கூறினர்.

spot_img

latest articles

explore more