சிறு மற்றும் நடுத்தர தொழில்நிறுவனங்களுக்கு 10 பில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு

0
17

புத்ராஜெயா, ஏப்.6-

சிறு மற்றும் நடுத்தர தொழில்நிறுவனங்களுக்கு (பி.கே.எஸ்) பொருளாதார ஊக்குவிப்பு திட்டத்தில் கூடுதலாக 10 பில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீட்டை இன்று அறிவித்தார் பிரதமர் டான்ஸ்ரீ முஹிடின் யாசின்.

கோவிட்-19 நோய் தொற்றின் பரவலினால், பாதிக்கப்பட்டுள்ள அத்தரப்பிற்கு, அந்நிதி பெரிதும் உதவும் எனவும் அவர் கூறினார்.

கடந்த மாதம் பிரதமர் டான்ஸ்ரீ முஹிடின் யாசின், 250 பில்லியனை உட்படுத்திய பொருளாதார ஊக்குவிப்பு திட்டத்தை அறிவித்திருந்தார். அதில், 128 பில்லியன் ரிங்கிட் மக்கள் நல திட்டங்களுக்கும் 100 பில்லியன் ரிங்கிட் வர்த்தகங்களை ஊக்குவிக்கவும் 2 பில்லியன் ரிங்கிட் நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தவும் அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்கு முந்தைய பொருளாதார ஊக்குவிப்பு திட்டத்தில், 20 பில்லியன் ரிங்கிட் அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.