கோலாலம்பூர், ஏப்ரல் 6-

கோவிட்-19 தொற்றுநோய் மற்றும் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் (MCO) காரணமாக, ராகாவின் கலக்கல் காலை அறிவிப்பாளர்கள், அகிலா மற்றும் சுரேஷ் ஏப்ரல் மாதம் முழுவதும் வீட்டில் பாதுகாப்பாக இருந்தவாரே ரசிகர்களைத் தொடர்ந்து தகவலறிந்தும் மகிழ்வித்தும் கொண்டிருப்பர்.

சாதனங்கள், ஸ்கைப் (Skype) மென்பொருள் மற்றும் பலவற்றைக் கொண்ட ஓர் அமைப்பைப் பயன்படுத்தி, இப்பிரிவு முன்கூட்டியே பதிவு செய்யப்பட்டு பின்னர் ஓர் அமைப்பில் பதிவேற்றப்பட்டு ஒவ்வொரு திங்கள் முதல் வெள்ளி வரை காலை மணி 6 முதல் 10 வரை ஒளிபரப்பப்படும்.

நடமாட்டக் கட்டுபாட்டு ஆணையை ஆக்கப்பூர்வமாக தழுவுவதன் மூலம், ராகாவின் கலக்கல் காலைக் குழுவும் #வீட்டிலேயேஇருங்கள் (#StayHome) என்ற ஆலோசனைக்கு ஏற்ப விழிப்புணர்வை ஏற்படுத்துகினர்.

ராகா ரசிகர்கள் ஏப்ரல் மாதத்தில் ஒலிபரப்பவிருக்கும் மற்றும் சமூக ஊடகங்களில் இடம்பெறும் பின்வரும் பிரிவுகளைக் கேட்டும் பங்கெடுத்தும் மகிழலாம்:

⦁ தன்னார்வாலர்களை அங்கீகரித்தல் (6 – 10 ஏப்ரல்): தேசிய தன்னார்வ வாரத்தை முன்னிட்டு, அகிலா மற்றும் சுரேஷ் ஆகியோர் COVID-19 pandemic தொற்றுநோய்களுக்கு மத்தியில் தைரியமாகவும் தன்னலமின்றியும் சமூகத்திற்கு சேவை செய்யும் சில தன்னார்வலர்களைப் பற்றினக் கருத்துக்களைப் பகிர்ந்துக் கொள்வர்.

⦁ தமிழ் புத்தாண்டு (13 – 17 ஏப்ரல்): ராகாவில் ஒலிபரப்பப்படுவதோடு அதன் சமூக வலைத்தளங்களிலும் பகிரப்படும் தங்களின் ‘ராசிப் பாலன்களை’ ரசிகர்கள் அறிந்துக்கொள்ளளாம். மேலும் புத்தாண்டின் போது பொதுவாக வீடுகளைச் சுற்றி தெளிக்க, குடிக்க மற்றும் பலவகையில் பயன்படுத்தப்படும் ‘மூலிகை நீருக்கு’ மாற்றுப் பொருளைப் பற்றியும் அறிந்துக் கொள்ளளாம். ரசிகர்கள் தங்களுக்கு பிடித்த தமிழ் புத்தாண்டு கொண்டாட்ட புகைப்படத்தைப் Instagram-இல் #CovidTamilNewYear என்று குறிப்பிட்டு பகிர்வதன் மூலமும் ராகாவின் Instagram புகைப்பட சவாலில் பங்கேற்கலாம்.

⦁ புவி நாள் (20 – 24 ஏப்ரல்): பொது இடங்களில் சுதந்திரமாக நடமாடும் விலங்குகளின் படங்கள் உட்பட COVID-19-ஆல் சுற்றுச்சூழலுக்கு ஏற்ப்பட்ட பாதிப்பைப் பற்றிய விவாதங்களுக்கு மத்தியல், அவ்விடமும் அச்சூழலும் COVID-க்கு முன்னும் பின்னும் எப்படி இருந்தது என்பதை ஒப்பிடும் வண்ணம் #StayHome என குறிப்பிட்டு ரசிகர்கள் அவ்விடத்தின் தற்போதைய புகைப்படங்களை (Google-இல் இருந்து) பகிர்ந்து கொள்ளலாம்.

⦁ #Covidகவிதை (#CovidKavithai): ஏப்ரல் முழுவதும், ரசிகர்கள் COVID-19 தொடர்பான சுவாரஸ்சியமான கவிதைகளை உருவாக்கி அதை Instagram-இல் ராகாவை டேக் (tag) செய்து பகிர்ந்துக் கொள்ளலாம்.

ராகாவைப் பின்தொடர

raaga.my
இலவச SYOK செயலியை உடனே பதிவிறக்கம் செய்து ராகாவை எங்கும் எப்போதும் கேட்டு மகிழுங்கள்!
www.facebook.com/RAAGA.my
www.instagram.com/raaga.my
https://www.youtube.com/channel/UCj3Rr8EGakWWoU6Su4KWidw
ஆன்-ஏரில் கேளுங்கள்