கோலாலம்பூர், செப். 13-
நமது குழுமத்தின் தொடர் தேசிய அளவிலான போட்டிகளுக்குப் பின்னர், மலேசியாவின் 63வது தேசிய நன்னாளில் தேசிய அளவிலான வண்ணமயமாக்கல் போட்டியைத் தமிழ்ப் பள்ளி மறுமலர்ச்சி திட்டம் ஏற்பாடு செய்தது..

இவ்வண்ணமயமாக்கல் போட்டி 2020 ஆண்டின் முதல் பதிப்பாகும். ஏப்ரல் மாதத்தில் “தேசிய அளவிலான திருக்குறல் போட்டி 2020” எனும் போட்டியும் சூன் மாதத்தில் “நீங்கள் தான் அடுத்த ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் எனும் கருவில் தேசியளவில் ஐ.க்யூ வினாவின் வினாடிகளில் விடை” போன்ற இயங்கலைப் போட்டிகளை வழிநடத்தியது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறான போட்டிகளை தொடர்ந்து தேசிய நன்னாளில் வண்ணமயமாக்கல் போட்டியும் ஏற்பாடு செய்யப்பட்டது.

இப்போட்டி நான்கு முதல் பன்னிரண்டு அகவையினருக்கானது. இப்போட்டி மூன்று பிரிவுகளாக நடத்தப்பட்டது. இப்போட்டி 31சூன்2020 இல் இயங்கலை வாயிலாக ஏற்பாடு செய்யப்பட்டது. இப்போட்டிக்கு தமிழ்ப் பள்ளியைச் சார்ந்த அன்பர்களும் பொதுமக்களும் தங்கள் வற்றாத ஆதரவினை நல்கினர்.

அருஞ்சிறப்பாக இதர சமூகத்தைச் சேர்ந்த குழந்தைகளும் இப்போட்டியில் கலந்து சிறப்பித்தது சமத்துவத்தை முன்னிலைப்படுத்தியது எனலாம். இவ்வண்ணமயமாக்கல் எனும் போட்டியின் நோக்கமானது கலை மூலம் இளம் தலைமுறையினரிடையே நாட்டின் தேசிய நன்னாளைப் பற்றிய முக்கியத்துவத்தையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்துவதும், கலை மூலம் மாணவர்களின் கற்பனை திறன்களை மேம்படுத்துவதுமே ஆகும். இப்போட்டியின் வாயிலாக சமூகப் பேதுமையற்ற இளஞ்சிறகுகளைக் கொண்ட நாடு நம் நாடு என உலகிற்கு நினைவூட்டியும் உள்ளது எனும் வகையில் மெச்சிப் புகழடைந்தோம்.

இப்போட்டியின் முடிவுகள் நமது தேசிய நன்னாளன்று அறிவிக்கப்பட்டன. இப்போட்டியில் தங்கள் திறமையால் மிளிர்ந்தவர்களுக்கு இரொக்க காசேலையும் பரிசுகளும் மின் சான்றிதழும் வழங்கப்பட்டது. இந்நிலையில் இவ்வாண்டு தமிழ்ப்பள்ளி மறுமலர்ச்சி திட்டத்தின் 2020 வரைவும் முற்றும். அடுத்தாண்டு பொலிவுடன் திறன் மேம்பாட்டு திட்டங்களுடன் இணைகிறோம்.

போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களின் பட்டியல்

Category A (4-6 yrs old)

 1. ஜோஆன் மரிசா தோமஸ் த/பெ ரிச்சர்ட் டாஸ்
 2. ரய்ஹான் ரிஸ்கின் பின் ரம்லி
 3. ஷர் ஷரி ஸாஸ்தன்
 4. ரானா த/பெ ராஐசெகர்
 5. ஜ. சன்ஐனா
 6. கவிலாஸ்ரீ த/பெ பாலமுருகன்
 7. முகமது ஆமிர் ஹபிஸ் பின் அப்துல் ஹலிம்
 8. ஸ்ரீ வினித்தா கெவின்ட்ரன்
 9. ஜைகிஷன் த/பெ தினதாயாலன்
 10. நாவேந்திரன் முருகன்

Category C (10-12yrs old)

 1. ஜான்வி த/பெ ரங்கநாதன்
 2. சஷ்வினா த/பெ சந்திரன்
 3. செங் சின் யூ
 4. ரேவதி த/பெ புவனேஸ்வரன்
 5. திவினா ஸ்ரீ த/பெ முனியாண்டி
 6. ரக்சிதா த/பெ ரெங்கசாமி பிள்ளை
 7. பர்வதன் த/பெ செவநதம்
 8. பனிமலர் சிவகுமார்
 9. திவ்யாஸ்ரீ த/பெ முனியாண்டி
 10. நிவேதா ரமேஷ்

Category B (7-9 yrs old)

 1. ஜெனோவா மார்செல்லா தோமஸ் த/பெ ரிச்சர்ட் டாஸ்
 2. அன்ரிதா த/பெ ஜொஷுவா ஜெபராஜ்
 3. வாபா சோபியா
 4. வித்தேஷ் த/பெ ரவின்ட்ரன்
 5. யாஸ்ரீ துர்கா த/பெ பிரேம்
 6. ரிய்யா நந்தவேனி நந்தகுமார்
 7. யாஷினி அகம்பரன்
 8. ரனியா மரிசா பின்தி ரம்லீ
 9. அர்திகா த/பெ மகடேஷ்
 10. கெசவனேஷ்வரன் த/பெ நாகராஜா