உங்களின் உடல் நலம் குறித்த விவரங்கள் தெரியுமா? நீங்கள் ஆரோக்கியமாக இருக்கிறீர்களா? உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கான விழிப்புணர்வு பட்டறை ஜோகூர் மாநிலம் முழுக்க நடைப்பெறவிருக்கிறது.

மலேசியாவில் பல்வேறு நோய்களால் அவதிப்படும் பெண்களுக்காக இப்பட்டறை மேற்கொள்ளப்படவுள்ளது.

இப்பட்டறையில் பெரிதும் கருதுவது புற்றுநோய் சம்பந்தப்பட்ட பல்வேறு விளைவு புற்றுநோய்கள். உதாரணத்திற்கு மார்பகப் புற்றுநோய், வாய்ப்புற்றுநோய், இரத்தப் புற்றுநோய், எலும்பு புற்றுநோய், என பல்வேறு புற்றுநோய்களிலிருந்து தங்களை தற்காத்துக் கொள்ள நாம் எவ்வாறான முன்னேற்படுகள் தாம் செய்திருக்க வேண்டும் என்பனவற்றை இப்பட்டறையானது தெளிவுப்படுத்தும்.

ஜொகூர் வாழ் மக்கள் கடந்த ஆண்டுகளில் குறிப்பாக பெண்களுக்கு மர்பகப் புற்றுநோய் , கர்பப்பைப் புற்றுநோய் , வாய்ப் புற்றுநோய் என்பவையின் எண்ணிக்கைகள் அதிகரித்தமையால் இப்பட்டறையை நடத்த நாங்கள் முன்மொழிவதாக சொகூர் மாநில கெஅடிலான் அரசியல் கட்சியின் மாநில மகளிர் பிரிவு தலைவர் குமாரி நப்சியாச் காமிச் அவர்கள் தெரிவித்தார்.

இப்பட்டறைப் பற்றிய மேல் விவரங்களுக்கு அருகில் இயங்கும் கெஅடிலான் அலுவலகம் அல்லது நகரான்மைக் கழக அலுவலகத்தை நாடலாம் எனவும் தெரிவித்தார்.