மலேசியாவின் முதன் இளம் ஆங்கில புதினம் (நாவல்) இயற்றுனர் சகானா த/பெ சூரிய இரமேஷ். தனது 18ஆம் அகவையில் தனது சுயப் படைப்பான (Crackers : Blood Flower) எனும் ஆங்கில நூலை வெளியிட்டுள்ளார்.

இஃது ஓர் ஆங்கில தொடர் கொலைகாரர் புதினம். கடந்த மே மாதம் 12ஆம் நாள் Partridge Singapore எனும் பதிப்பகத்தின் மூலமாக இந்நூல் வெளியீடானது. நாட்டின் இ்ந்திய இளம் ஆங்கிலப் படைப்பாளர் எனும் பெருமைக்கும் உகந்தவர் இவர்.

தற்போது 18 அகவை நிரம்பிய இவர் கடந்தாண்டு தான் படிவம் ஐந்து தேர்வில் (SPM) 7 ‘ஏக்கள்’ பெற்று கல்வியிலும் சிறந்து விளங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நூலை (amazon) மின் வர்தக தளத்திலிருந்து பெறலாம்.