கோலாலம்பூர், செப், 23-
பி.கே.ஆர் தலைவர் டத்தோஶ்ரீ அன்வார் புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கு “வலுவான மற்றும் உறுதியான ஆதரவும் பெரும்பான்மையும்” தமக்கு இருப்பதாக அறிவித்த சிறிது நேரத்திலேயே பாஸ் தமது நிலைப்பாட்டை வெளியிட்டுள்ளது.

பாஸ் கட்சியைச் சார்ந்த எந்த நாடாளுமன்ற உறுப்பினரும் அன்வாரை ஆதரிக்கவில்லை. இத்தருணத்தில் அனைவரும் கட்சியின் அதிகாரப்பூர்வ அறிக்கைக்காகக் காத்திருக்க வேண்டுமென அக்கட்சியின் துணைத் தலைவர் துவான் இப்ராஹிம் கூறியுள்ளார்.

இதனிடையே அக்கட்சியின் உதவித் தலைவர் நிக் முகமட் அமார், பிரதமரின் அறிவிப்பிற்காகக் காத்திருக்குமெனக் கூறியதாக FMT இணையத்தளப் பதிவேடு கூறியுள்ளது.

முன்னதாக, அன்வார் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் ஒரு புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கான “ஆதரவையும் பெரும்பான்மையான உறுதியான அறிவிப்பையும் வெளியிட்டார், அதோடு, “நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் மலாய் மற்றும் இஸ்லாமியர்களிடமும் பெரும்பான்மை ஆதரவைப் பெற்றுள்ளதாகக் கூறினார்.