கோலாலம்பூர், செப். 23
புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்களின் போதுமான ஆதரவு இருப்பதாகக் கூறும் பி.கே.ஆர் தலைவர் அன்வார் இப்ராஹிற்கு, தமது புதிய கட்சி பெஜுவாங்கின் ஆதரவு இல்லை என்று டாக்டர் மகாதீர் கூறினார்.

ஆதரிப்பதா இல்லையா என்பதை பின்னர் முடிவு செய்யலாம். ஆனால் இப்போது, ​​இல்லை” என்று அவர் இன்று பிற்பகல் கோலாலம்பூரில் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

அன்வாருக்கு ஆதரவு தெரிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பட்டியலில் டாக்டர் மகாதீர் இடம்பெறவில்லை. அதோடு அவரது ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர்களின் நிலைப்பாடு குறித்து பின்னர் அறிவிக்கப்படுமென அன்வார் இப்ராஹிம் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆட்சி அமைப்பதற்கு போதுமான ஆதரவு இருப்பதாக 2008ஆம் ஆண்டு அன்வார் ஓர் அறிவிப்பை வெளியிட்டார். ஆனால் அது ஈடேறவில்லை. தற்போதும் அதே நடைமுறையை அவர் முன்னெடுப்பதால், அனைவரும் முடிவு தெரியும் வரை காத்திருக்க வேண்டுமென மகாதீர் கூறியுள்ளார்.