கோலாலம்பூர், செப். 23- 

புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கு போதுமான நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தமக்கு இருப்பதாக பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராஹிம் அறிவிப்பை தாங்கள் கவனத்தில் கொண்டுள்ளதாக ஜனநாயக செயல் கட்சி (DAP) கூறியுள்ளது. 

அன்வார் கூறுவது உண்மையென்றால், அவருக்கு போதுமான நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இருக்கும் பட்சத்தில் நம்பிக்கைக் கூட்டணியின் முடிவிற்கு ஏற்ப ஜசெக பிளவுஒடாத ஆதரவை வழங்குமென அக்கட்சியின் தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் கூறியுள்ளார்.