ஜோகூர் பாரு, நவம்பர் 24:-
ஜோகூர் ஆட்சியாளர் சுல்தான் இண்கண்டார் இன்று சுல்தான் அமீனா மருத்துவமனை இயக்குநர், அரச வார்டைச் சேர்ந்த பணியாளர்களுக்கு மகிழுந்தைப் பரிசாக வாங்கினார்.
முன்னதாக அதே வார்டில் பணிபுரியும் 10 தாதியர்களுக்கு மைவி காரைப் பரிசாக வழங்கியிருந்தார்.


“அவர்களின் சேவையையும் தியாக மனப்பான்மையையும் பாராட்டும் வகையில் இந்த பரிசு வழங்கப்பட்டது என அவரது முகநூல் கணக்கில் பதிவிடப்பட்டது.“


அவர்களுக்கு புரோட்டோன் X70, மைவி வகை மகிழுந்துகள் வழங்கப்பட்டன.
பரிசைப் பெற்ற மருத்துவப் பணியாளர்கள் தங்களின் நன்றியினைத் தெரிவித்துக் கொண்டர்.



