Homeகுற்றவியல்ஊழல் வழக்கில், ஈசா சாமாட் குற்றவாளியே!

ஊழல் வழக்கில், ஈசா சாமாட் குற்றவாளியே!

கோலாலம்பூர் | பிப்பரவரி 3:-

சரவாக்கில் தங்கும்விடுதியை வாங்கிய விவகாரத்தில், 9 ஊழல் குற்றச்சாட்டைகளை எதிர்நோக்கியிருந்த பெல்டாவின் முன்னாள் தலைவர் தான் ஸ்ரீ ஈசா சாமாட் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ஈசா சாமாட்டிற்கு எதிரான வழக்கில் எழுந்துள்ள சந்தேகங்களை முறியடிப்பதில், அவரது வழக்கறிஞர் தரப்பு தோல்வி அடைந்துள்ளதாக, நீதிபதி முஹம்மட் நஸ்லான் முஹமட் கசாலி தெரிவித்துள்ளார்.

நெகிரி செம்பிலானின் அந்த முன்னாள் மந்திரி பெசாருக்கான தண்டனைகள் குறித்து விரைவில் அறிவிக்கப்படலாம் எனவும் முஹம்மட் நஸ்லான் கூறியுள்ளார்.

முன்னதாக, சம்பந்தப்பட்ட தங்கும்விடுதியை வாங்கும் விவகாரத்தில்,  முஹம்மட் ஜாஹிட் மாட் அரிப் வாயிலாக, கெகாசான் அபாடி புரோபெர்ட்டிஸ் நிறுவனத்தின் வாரிய இயக்குநர் இக்வான் ஸைடெலிடமிருந்து ஈசா சாமாட் 3,090,000 ரிங்கிட்டை கையூட்டாக பெற்றதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.  

பி.கே.ஆரின் முன்னாள் தீவிர ஆதரவாளரான ஜாஹிட், பக்காத்தான் ஹாராப்பான் அரசாங்கம் கவிழ்ந்த பிறகு, பெர்சாத்துவில் இணைந்ததோடு, செனட்டராகவும் உள்ளார்.

spot_img

latest articles

explore more