Homeஅரசியல்15வது பொதுத் தேர்தலில் 50-60 நாடாளமன்றத் தொகுதிகளில் பெஜுவாங் போட்டியிடத் திட்டம் – மார்ஸூக்கி

15வது பொதுத் தேர்தலில் 50-60 நாடாளமன்றத் தொகுதிகளில் பெஜுவாங் போட்டியிடத் திட்டம் – மார்ஸூக்கி

கோலாலம்பூர் | பிப்பரவரி 3:-

பெஜுவாங் கட்சியின் வயது 5 மாதங்கள் தான். அரசியல் களத்தில் புதிய வரவாக இந்தக் கட்சி விளங்குகிறாது.

இருப்பினும், இருமுறை பிரதமராக இருந்த துன் மகாதீர் போன்ற முக்கியப் பிறமுகர்களின் ஈடுபாட்டால் பெஜுவாங் கட்சி அடுத்தப் பொதுத் தேர்தலில் கடுமையானப் போட்டியை வழங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

ஏறத்தாழ 50 முதல் 60 நாடாளுமன்றத் தொகுதிகளைத் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், எதிர்வரும் 15வது பொதுத் தேர்தலில் போட்டியிடத் திட்டமிடப்பட்டிருப்பதாக அதன் இடைக்காலத் தலைவர் மார்ஸூக்கி யாஹ்யா தெரித்திவித்துள்ளார்.

இதற்கு முன்னர் கடந்த சனவரி 6ஆம் நாள்அக்கட்சியின் ஒரு அரசியல் கட்சியாக பதிவு செய்வதில் இருந்து தோல்வி கண்டுள்ளது.

ஓர் அரசியல் கட்சி என்பது உள்துறை அமைச்சின் கீழ் இயங்கும் சங்கப்பதிவகத்தில் பதிவு செய்யப்பட்டு அங்கீகரிக்கப்பட வேண்டும்.

அதன் பதிவு விவகாரம் இன்னும் முடிவு பெறாத நிலையில், அடுத்தத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து வினவியபோது, வேறொரு கட்சியின் பெயரில் போட்டியிடும் என மார்ஸூக்கி தெரிவித்துள்ளார்.

வேறு பல வழிகள் இருந்தாலும், இன்னும் எந்தக் கட்சியின் பெயரின் கீழ் போட்டியிடும் என்பது குறித்து இன்னும் முவிடு செய்யப்பட வில்லை. மேலும், அமானா கட்சியின் கீழ் போட்டியிடுவதாகப் பரவலாகப் பேசப்பட்டு வந்த நிலையில் இன்னும் எவ்வித முடிவும் உறுதி செய்யப்பட வில்லை என உறுதிப்படுத்தப்பட வில்லை.

இந்நிலையில் நாடாளுமன்றத்தில் பெஜுவாங் கட்சி மூன்றாவது பெரும்பான்மையையும் எதிர்க்கட்சி எனும் பெயரிலும் இல்லாமல் தனது நிலைப்பட்டைக் கொண்டுள்ளது.

வாரிசான் கட்சியுடனும் சரவாக்கில் இருந்து இன்னும் சில தரப்பினருடன் கை கோர்த்துள்ள நாங்கள் (பெஜுவாங்) நாடாளுமன்றத்தில் ஆளும் கட்சிக்கோ எதிர்க்கட்சிக்கோ ஆதரவளிக்காமல்  சுயேட்சையாக இருக்கின்றோம்.

எனவே, தற்சமயம் இந்தக் குழுதான் இரு நிலையையும் சீராக்கும் தன்மை கொண்டதாக அமைந்துள்ளது.

மத்திய அளவில் ஆட்சியைக் கைப்பற்றும் நோக்கில் நிகழ்த்தப்பட்ட பல அரசியல் நாடங்களைச் சுட்டிக் காட்டி மாஸூக்கி, அரசியல் கூட்டணியில் உறுப்பியக் கட்சிளுக்கும் சகக் கட்சிகளுக்கும் இடையே ஏற்பட்டுள்ள சலப்புக்குக் காரணமாக இருப்பதாக அவர் சொன்னார்.

பெஜுவாங் கட்சி பிரதமர் தான் ஶ்ரீ முகிதீன் யாசினின் ஆட்சியை அங்கீகரிக்க வில்லை என்றாலும், புதிய ஆட்சியை அமைப்பதற்கு கூட்டணிக் கட்சிகளை மிகக் கவனமாகத் தேர்ந்தெடுக்கும்.

எங்களுடன் கைகோர்த்து நிற்க வேண்டும் என்கிறவர்கள் தன்னமற்ற, எந்தத் தனியாள் அல்லது கட்சியின் தனிப்பட்ட இலாபத்தை மட்டும் நோக்காமல் கொள்கைக்குத் துணை நிற்பவர்களாக இருக்க வேண்டும்.

இப்போது நாம் சந்தித்துக் கொண்டிருக்கும் சிக்கல்களில் மிகப்பெரியது, கையூட்டு !

15வது பொதுத் தேர்தலுக்கானத் தயார் நிலை

அடுத்தப் பொதுத் தேர்தலுக்குத் தயாராகிக் கொண்டிருக்கும் பெஜுவாங் கட்சி நாட்டின் எல்லா மூலைகளிலும் தனது கிளைகளை உருவாக்கக் கூடியக் காலம் தற்போது கைவசம் இல்லை. மிகக் குறுகியக் காலமே எஞ்சியுல்ளது.

எனவே, தற்போதைய சூழலில் மாநில அளவிலும் வட்டார நிலையிலும் மட்டுமே கவனம் செலுத்தத் திட்டமிட்டிருப்பதாகவும் மார்ஸூக்கி தெரிவித்தார்.

இப்போதுள்ளக் காலக்கட்டத்தில் பெஜுவாங் வசம் மாநில – வட்டாரப் பொருப்பாளர்கள் மட்டுமே இருக்கிறாரகள்.

எங்களின் இலக்கு அடுத்தப்ம்பொதுத் தேர்தல். அதற்காக மாநில செயற்குழுக்கள் பெரும் பங்கை ஆற்ற இருக்கிறார்கள். நாடாளுமன்றத் தொகுதிகள் அடிப்படையில் கள ஆய்வு நடந்து கொண்டு இருக்கிறது. அதன் அடிப்படையில், போட்டியிட இருக்கும் தொகுதிகளும் அதன் வேட்பாளர்களின் பட்டியலும் முடிவு செய்யப்படும் என மாஸூக்கி கூறினார்.

தேர்தலுக்கானப் பணிகளில் ஈடுபட கட்சி நகர்த்தப்பட்டுக் கொண்டிருந்தாலும் தற்போது நடப்பில் உள்ள நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையால் அப்பணிகள் தற்காலிகமாகத் தேக்கம் கண்டுள்ளன.

spot_img

latest articles

explore more