சென்னை | பிப்பரவரி 3:-

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘டாக்டர்’ திரைப்படத்தின் வெளியீடு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘கோலமாவு கோகிலா’ இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘டாக்டர்’.இந்தப் படத்தில் ப்ரியங்கா அருள் நாயகியாக நடிக்கிறார். இது அவருக்கு முதல் தமிழ்ப்படம். மேலும் வினய், யோகி பாபு உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

சிவகார்த்திகேயனின் தயாரிப்பு நிறுவனம் மற்றும் கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னை, ஹைதராபாத், கோவா உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றது.

கடந்த ஜனவரி மாதத்தில் ‘டாக்டர்’ படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக நிறைவடைந்த நிலையில் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் மூழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. சமீபத்தில் சிவகார்த்திகேயன் டப்பிங் பேசி முடித்திருந்தார்.

இந்நிலையில் ‘டாக்டர்’ திரைப்படம் மார்ச் 26-ம் தேதி திரையரங்கில் வெளியாகும் என படக்குழு அறிவித்திருக்கிறது. இதனால் இரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.