சென்னை | பிப்பரவரி 3 :-

மாஸ்டர் ஒ.டி.டி வெளியீட்டின் எதிரொலி…

திரையரங்குகளில் வெளியாகும் படங்கள் 50 நாட்களுக்குப் பிறகே ஓ.டி.டி.யில் வெளோயிடப்படும் நிலையில் விஜயின் மாஸ்டர் படம் வெளியான 16 நாட்களிலேயே ஓ.டி.டி.யில் வெளிவந்து திரையரங்க உரிமையாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதுகுறித்து திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் ஆலோசனை நடத்தியதை அடுத்து, புதிய விதிமுறைகள் விதித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

குறைந்தது சிறிய படங்களுக்கு 30 நாட்களும், பெரிய படங்களுக்கு 50 நாட்களுக்கு பிறகே, ஒடிடி வெளியீடு என்று பேச்சு வார்த்தை நடத்தப்பட்டுள்ளது.

மீண்டும் விஷால் – முத்தையா கூட்டணி..!

குட்டிப் புலி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான முத்தையாவின் கொம்பன், மருது, தேவராட்டம் போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், அண்மையில் வெளிவந்த புலிக்குத்தி பாண்டி திரைப்படம் டி.ஆர்.பி.யில் முன்னணியில் உள்ளது.

இதையடுத்து, மருது படத்தில் இணைந்து பணியாற்றிய விஷால் – முத்தையா கூட்டணி, தற்போது மீண்டும் இணைய உள்ளதாகக் கூறப்படுகிறது.

மாதம் 26-ஆம் தேதி ‘டாக்டர்’ வெளியாகும்..!

வருகிற மார்ச் மாதம் 26-ஆம் தேதி ‘டாக்டர்’ படம் திரையரங்குகளில் வெளியாகும் என்று நடிகர் சிவகார்த்திகேயன் அறிவித்துள்ளார்.

கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் நிறுவனத்துடன் சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்‌ஷன் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள, இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

புதிய ஸ்டூடியோவில் இளையராஜா பாடல் பதிவு…!

வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படத்திற்கான பாடல் பதிவு பணிகளை இளையராஜா தனது புதிய ஸ்டூடியோவில் மேற்கொள்ளவிருக்கின்றார்.

பிரசாத் ஸ்டூடியோவில் 35 ஆண்டுகளுக்கு மேலாக இசையமைத்து வந்த இளையராஜா, சமீபத்தில் அங்கிருந்து வெளியேற்றப்பட்டார். இதனை எதிர்த்து வழக்கு தொடங்கப்பட்ட நிலையில், பின்னர் சமரசத் தீர்வு ஏற்பட்ட பின்னர் சொந்தமான உடைமைகள் அவரிடம் ஒப்படைக்கப்பட்டன.