கோலாலம்பூர் | பிப்பரவரி 5:-
வசதி கொண்ட மேல்தட்டு மக்கள் எனச் சொல்லப்படும் தி20 (T20) தரப்பினரில் ஏறத்தாழ பாதி பேர் தங்களின் ஊழியர் சேமநிதியில் இருந்து ஐ-சினார் வாயிலாகத் தங்கள் பணத்தை வெளியில் எடுத்து தங்கம், பங்குச் சந்தை போன்றவற்றில் முதலீடு செய்யத் திட்டமிட்டு விண்ணப்பத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யூசிஎஸ்ஐ வாக்கெடுப்பு ஆய்வு மையத்தின் அண்மையத் தரவின்படி, ஏறத்தாழ 40 முதல் 55 வயதுக்குட்பட்டவர்களே இது போன்ற செயல்பாடுகளில் அதிகம் ஈடுபடுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் உள்ள 809 பேர்கள் கலந்து கொண்ட இந்த வாக்கெடுப்பில் ஏறத்தாழ 39.4 விழுக்காட்டினர் தங்கத்திலும் பங்குச் சந்தையிலும் முதலீடு செய்ய அந்த ஐ-சினார் பணத்தைப் பயன் படுத்துவதாகத் தெரிய வந்துள்ளது.
அந்த விழுக்காட்டில் ஏறத்தாழ 47.7 விழுக்காட்டினர் தி20 தரப்பினரும், 31.1 விழுக்காட்டினர் எம்40 தரப்பினரும் 35.3 விழுக்காட்டினர் 35.3 விழுக்காட்டினரும் ஆவர்.
கோவிட்-19 பெருந்திற்றுக் காலத்தில் பொருளாதாரப் பிரச்சனைகளையும் பண நெருக்கடியையும் தற்போது நாம் சந்தித்துக் கொண்டிருந்தாலும் ஐ-சினார் பணத்தை வெளியில் எடுக்கும் நோக்கங்களில் ஒன்றாக தி20 தரப்பினரால் கூறப்பட்டுகிறது.
அவ்வாய்வில் கலந்து கொண்ட 26 வயது முதல் 55 வயது வரையிலான பி40 – எம் 40 தரப்பினரின் முதன்மை நோக்கமாகக் கடனைத் திரும்பச் செலுத்துவது தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் தொடர்பில், இது போன்ற கடினமானக் காலக் கட்டங்கலை எதிர்கொள்ளவும் நிதி தொடர்பான முதன்மைத் தேர்வையும் மக்கள் மீண்டும் ஒருமுறை சீர்தூக்கிப் பார்க்க வேண்டும் என யூசிஎஸ்ஐ தெரிவித்துள்ளது.
மொத்த வாக்கெடுப்பில் கலந்து கொண்டவர்களில் 48.6 விழுக்காட்டினர் மட்டுமே ஐ-சினார் பணத்தைக் கொண்டு உணவும் சமையல் பொருட்களையும் வாங்குவதாக அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


