மஞ்சோங் | மார்ச் 11:-
வரலாற்று பூர்வமான கங்கா நகரம் என்றழைக்கப்படும் பெருவாஸ் நகரத்திற்கு தீயணைப்பு நிலையம் உருவாக்க படவேண்டும்.
பேரா மாநிலத்தில் இருக்கும் மஞ்சோங் மாவட்டத்தில் உள்ள முக்கியமான பகுதிகளான, லுமூட், ஸ்ரீ மஞ்சோங், சித்தியவான், ஆயர்தவார், பந்தாய் ரிமிஸ் போன்ற இடங்களில் தீயணைப்பு நிலையம் இருக்கின்ற நிலையில் சரித்திர பூர்வமான புருவாஸ் நகரில் மட்டும் இல்லாதது பெரும் வருத்தம் அளிக்கிறது.
பெருவாஸ் பகுதியில் தீ ஏற்பட்டால், பந்தாய் ரிமிஸ், அல்லது ஆயர்தாவாரில் இருந்து தான் தீயை அணைக்க தீயணைப்பிப் படஒ வர வேண்டும். அதற்கு ஏறத்தாழ குறைந்தது அரைமணி நேரமாவது ஆகும். அதற்குள் கடைகளோ அல்லது வீடுகளோ முற்றாக எரிந்து சாம்பலாகிவிடும்.
எனவே, பேராமாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ சாரணி முஹமட் பெருவாஸ் நகரத்திற்கு ஒரு தீயணைப்பு நிலையத்தை அமைக்க முயல வேண்டும் என பெருவாஸ் தொகுதி மக்கள் முற்போக்கு கட்சி ( PPP ) கேட்டுக்கொண்டுள்ளது.


