Homeஉலகம்சீனாவின் புதிய வகைத் தடுப்பூசி : மலேசியாவில் பரிசோதனை !

சீனாவின் புதிய வகைத் தடுப்பூசி : மலேசியாவில் பரிசோதனை !

கோலாலம்பூர் | ஜூன் 5 :-

இம்முறை மற்றொரு சீன நாட்டுத் தயாரிப்பான Shenzhen Kangtai Biological Products Co Ltd. இன் கோவிட்-19 தடுப்பூசியைப் பரிசோதனை செய்யத் மலேசியா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

கடந்த மே 28ஆம் நாள், மூன்றாம் கட்டப் பரிசோதனைக் கூட ஆய்வில் மலேசிய மருந்தியல் கட்டுப்பாடு மன்றம் அந்தத் தடுப்பூசிக்கு அனுமதி வழங்கியுள்ளது.

இந்தப் பரிசோதனை நாடு முழுவதுமுள்ள 8 முக்கிய ஆய்வுக்கூடங்களில் 3,000க்கும் மேற்பட்ட 18 வயதுக்கும் மேல் உள்ளவர்கள் உட்படுத்தப்பட்டுள்ளார்கள். இது சுமார் 15 முதல் 19 மாதங்களுக்கு நீடிக்கும் என சுகாதார அமைச்சின் தலைமை இயக்குநர் தான் ஶ்ரீ டத்தோ ஶ்ரீ நோர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.

இதே ஆய்வுக் கூடப் பரிசோதனையில் ஈடுபடும் நாடுகளாக கோளம்பியா, அர்ஜெண்டினா, பாக்கிஸ்தான், பிலிப்பைன்ஸ், யூக்ரேயின் ஆகிய நாடுகள் விளங்குகின்றன.

கடந்த மே 14 ஆம் நாள், சீனாவில் இந்தத் தடுப்பூசி அவசரகாலப் பயன்பாட்டுக்கு அனுமதிக்கப்பட்டிருந்தது.

சொந்தத் தடுப்பூசியைத் தயாரிப்பதோடு ஆக்ஸ்ஃபோர்ட் வெளியீடான ஆஸ்ட்ராஸெனாக்கா தடுப்பூசியையும் Kangtai நிறுவனம் வெளியிட சிறப்பு அனுமதியும் பெற்றுள்ளது.

spot_img

latest articles

explore more