கோலாலம்பூர் | ஜூன் 5 :-

நாளை நடைபெற இருக்கும் பிகேஆர் கட்சியின் தேசிய நிலையிலான ஆண்டுப் பொதுக் கூட்டத்தை ஒத்திவைக்கும்படி தெரிவிக்கப்பட்டது.

அதன் ஏற்பாட்டுக் கூட்டத்தின் தலைவர் நிக் நஸ்மி நிக் அகமாட் தெரிவிக்கயில், நேற்று மாலை தேசியப் பாதுகாப்பு மன்றத்திடம் இருந்து கிடைக்கப்பெற்ற ஒரு கடிதத்தில் அவ்வாறு குறிப்பிடப்பட்டிருந்ததாக அவர் உறுதிப்படுத்தினார்.

அதே நாளில் வாய்மொழி தலவலாக சங்கப் பதிவிலாகாவிடமிருந்தும் கிடைத்ததாகவும் அவர் தெரிவித்தார்.

ஆனால், தற்போழ்து தேசியப் பாதுகாப்பு மன்றத்தின் கடிதத்தையும் கடந்த மே 27 ஆம் நாள் அதே தேசியப் பாதுகாப்பு மன்றக் கடிதத்திற்கும் முரண்பாடு இருப்பதாக நிக் நஸ்மி கூறியுள்ளார்.

முந்தையக் கடிதத்தில் இயங்கலையில் நடைபெற உள்ள இந்த ஆண்டுப் பொதுக் கூட்டத்திற்கு எவ்விதத் தடையும் இல்லை எனத் தெரிவித்தத் தேசியப் பாதுகாப்பு மன்றம் தற்போதைய அதன் புதியக் கடிதத்தில் அதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த முடிவைக் கண்டித்து பிகேஆர் கட்சி வண்மையாகக் கண்டித்தாலும் கட்சியின் உச்சமன்றம் அவ்வாணாஇக்குக் கட்டுப்பட்டு ஆண்டுப் பொதுக் கூட்டத்தை ஒத்திவைக்க முடிவு செய்து இருப்பதாக நிக் நஸ்மி கூறினார்.