கோலாலம்பூர் | ஜூன் 10 :-
இன்று முதல் எசுபிஎம் 2020ஆம் ஆண்டுக்கான முடிவுகளை மாணவர்களும் பெற்றோர்களும் காலை 10.00 மணி தொடங்கி பெற்றுக் கொள்ளலாம். அதனை 2 முறைகளில் தெரிந்து கொள்ளலாம் எனக் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
1. இணையத்தளச் சேவை
myresult1.moe.gov.my அல்லது myresult2.moe.gov.my என்ற இணையப்பக்கத்தில் வலம் வந்து முடிவுகளைப் பெற்றுக் கொள்ளலாம்
2. குறுஞ்செய்தி சேவை
SPM <இடைவெளி> அடையாள அட்டை எண் <இடைவெளி> எசுபிஎம் பதிவு எண் (Angka Giliran) எனக் குறிப்பிட்டு 68886 எனும் எண்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பி முடிவுகளைப் பெறலாம். இந்தச் சேவை 10-6-2021 காலை 10.00 மணி முதல் 17-6-2021 மாலை 6.00 மணி வரை செயல்படும்.
இணைய வசதி இல்லாத மாணவர்கள், மாநிலக் கல்வித் திணைக் களத்தையோ அல்லது மாவட்டக் கல்வி அலுவலகத்தையோ நாடலாம்.





