கோலாலம்பூர் | ஜூன் 10 :-
தகுதி பெற்றவர்களுக்கு மேலும் 3 மாதங்கள் பிடிபிடிஎன் கடல்விக் கடனுதவி திரும்பச் செலுத்துவதிலிருந்து ஒத்தி வைக்க அனுமதிக்கப்படுகிறது என அரசாங்கம் அறிவித்துள்ளது.
இது குறித்து பேசிய உயர்க்கல்வி அமைச்சர் சத்தோ ஶ்ரீ டாக்டர் நோராய்னி அகமாட், கோவிட்-19 ஆல் அக்கல்விக் கடனைத் திரும்பச் செலுத்துவதில் பெரும் சிக்கலை பலர் எதிர்நோக்கி இருப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
அதற்கான விண்ணப்பத்தை பிடிபிடிஎன் கல்விக் கடனுதவி அகப்பக்கத்தில் ஜூன் 10 ஆம் நாள் முதல் ஆகஸ்டு 31ஆம் நாள் வரையில் செய்து கொள்ளலாம் என அமைச்சர் நோராய்னி கூறினார்.
இதனால் பலரின் நிதிச்சுமை குறைக்கப்படும் என அவர் மேலும் சொன்னார்.
இதற்கு முன்னர், 19 மார் 2020 முதல் 31 திசம்பர் 2020 வரையில் சிறப்பு அனுமதியின் பெயரில் அனைத்து பிடிபிடிஎன் கடனுதவி பெற்றவர்களுக்கு கடன் ஒத்திவைப்பு வழங்கப்பட்டது. பின்னர், சனவரி 2021 முதல் மே 2021 வரையில் கடனுதவி ஒத்திவைப்பி வழங்கப்பட்டது.
கல்விக் கடனுதவி ஒத்திவைப்பு குறித்து மேல் விவரங்கள் அறிய di 03-2193 3000 எனும் எண்களில் திங்கள் முதல் வெள்ளி வரையில் காலை 9.00 மணி முதல் மாலை மணி 5.00 வரையில் தொடர்பு கொண்டு அறிந்து கொல்ளலாம்.





