கோலாலம்பூர் | ஜூன் 10 :-

கடந்த 1969 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட Majlis Gerakan Negara (Mageran) திட்டம் குறித்து பேரரசரிடம் துன் டாக்டர் மகாதீர் பரிந்துரைத்ததாகத் தெரிவித்தார்.

பேரரசரர் இந்தப் பரிந்துரையை நிராகரிக்க வில்லை. இருந்தாலும், அது அரசு தரப்பிடமிருந்து வந்திருக்க வேண்டும் எனக் கூறியதாக துன் மகாதீர் தெரிவித்தார்.

இது குறித்து அரசு தரப்பு ஏற்குமா எனும் சந்தேகம் எனக்கு உண்டு.

மாகெரானின் தலைமைப்ம் பொறுப்பை யார் வகிக்கப் போகிறார்கள் என விவாதிக்க வில்லை. ஆனால், அதன் அமைப்பு முறையால் தேவையான உதவிகளை அரசுக்கு செய்து தர வாய்ப்பு இருக்குமா எனப் பேசப்பட்டது என துன் மகாதீர் குறிப்பிட்டார்.