புத்ராஜெயா | ஜூன் 10:-

மலேசியாவில் இன்று 5,671 பேருக்குப் புதிதாக கோவிட்-19 நோய்த்தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இத்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 639,562 -ஐ எட்டியுள்ளது.

இன்று கோவிட்-19 பெருந்தொற்றால் 73 பேர் பலியானர். அதனால் தற்போது மொத்த மரண எண்ணிக்கை இது வரையில் 3,684 ஆக உயர்ந்துள்ளது.

இது வரையில் 911 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில் 462 பேருக்கு சுவாச உதவிக் கருவி பொருத்தப்பட்டுள்ளது.

தீவிர சிகிச்சைக்குப் பின்னர் இன்று 7,325 பேர் குணமடைந்துள்ள வேளையில் 556,030 பேர் மொத்தமாக இந்நோயிலிருந்து விடுபட்டுள்ளனர்.