Homeஅரசியல்மாகெரான் : நம்பிக்கைக் கூட்டணி நிராகரித்தது !

மாகெரான் : நம்பிக்கைக் கூட்டணி நிராகரித்தது !

கோலாலம்பூர் | ஜூன் 11 :-

துன் டாக்டர் மகாதீர் பரிந்துரைத்த மாகெரான் அமைப்பை நம்பிக்கைக் கூட்டணி நிரகாரித்துள்ளது.

அதற்குப் பதிலாக ஊரடங்குச் சட்டம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு மீண்டும் நாடாளுமன்றக் கூட்டம் நடைபெற அது வலியுறுத்துகிறது.

நாடாளுமன்ற மக்களாட்சி முறையை முழுதாய் ஆதரிக்கும் நம்பிக்கைக் கூட்டணி, மாகெரானை நிராகரிப்பதோடு நாடாளுமன்றம் மீண்டும் கூடுவதையே தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

மக்கள் எதிர்கொண்டுள்ள கோவிட்-19, பொருளாதாரம், ஆகியவற்றோடு அரசியல் சிக்கல்களுக்கும் நிரந்தரத் தீர்வைக் கொண்டு வர மக்களாட்சி முறை நன்முறையில் செயல்பட வேண்டும். அதற்கு மக்களின் குரல் எவ்விதக் கட்டுப்பாடும் இன்றி கேட்கப்பட வேண்டும். அதற்கு ஒரே தீர்வு நாடாளுமன்றம் தான் என நம்பிக்கைக் கூட்டணியின் தலைமைத்துவ மன்றம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

அந்தக் கூற்றை பிகேஆர் தலைவர் அன்வார் இபுராகிம், ஜ.செ.க.வின் தலைமைச் செயலாளர் லிம் குவான் எங், அமானா கட்சியின் தலைவர் முகம்மட் சாபு ஆகியோர் இணைந்து கையொப்பமிட்டு வெளியிட்டுள்ளனர்.

இதனிடையே, நேற்று அரண்மனையில் மாமன்னரைச் சந்தித்த துன் மகாதீர், பேரரசரர் இந்தப் பரிந்துரையை நிராகரிக்க வில்லை. இருந்தாலும், அது அரசு தரப்பிடமிருந்து வந்திருக்க வேண்டும் எனக் கூறியதாகத் தெரிவித்தார்.

அதற்கு முந்தைய நாளில், பிரதமர் தான் ஶ்ரீ முகிதீன் யாசினின் இரசிய செயலாளர் மார்ஸுக்கி முகம்மட் வெளியிட்டக் காணொலியில், மாகெரான் குறித்தப் பரிந்துரையை அவர் கடுமையாக எதிர்த்திருந்தார்.

அதே எதிர்ப்பை ஜ.செ.க. தலைவர்களும் அம்னோ தலைவர்களும் காட்டிருந்தனர்.

பொது வெளிக்கு அந்தப் பரிந்துரை வருவதற்கு முன்னர் அது குறித்து தமது தரப்பு கருத்து தெரிவிக்க முடியாது என பிகேஆர் தலைவர்களும் குறிப்பிட்டு இருந்தனர்.

கடந்த மே மாதம் இறுதியில் பிகேஆர் கட்சித் தலைவர் தம்மை தொடர்பு கொண்டிருந்ததாகக் குறிப்பிட்ட துன் மகாதீர், மாகெரான் குறித்து விவாதிக்கப்பட்டதா இல்லையா என்பது குறித்து நேற்று தெரிவிக்கவில்லை.

spot_img

latest articles

explore more