கோலாலம்பூர் | ஜூன் 11 :-

மாமன்னர் இன்று மூன்றாவது நாளாக நாட்டின் முக்கிய அரசியல் தலைவர்களை அரண்மனையில் சந்தித்தார்.

கடந்த இரண்டு நாட்களாக 8 அரசியல் தலைவர்கல் இது வரையில் மாமன்னரைச் சந்தித்துள்ளனர்.

முதல் நாளில் அமைச்சரவைக் கூட்டத்திற்கு முன்னதாக பிரதமர் தான் ஶ்ரீ முகிதீன் யாசின், பிகேஆர் தலைவர் டத்தோ ஶ்ரீ அன்வார் இபுராகிம், ஜ.செ.க.வின் பொதுச் செயலாளர் லிம் குவான் எங், அமானா கட்சியின் தலைவர் முகம்மட் சாபு ஆகியோர் மாமன்னரை முதல் நாள் சந்தித்தனர்.

இரண்டாம் நாளான நேற்று, பாஸ் கட்சியின் துணைத் தலைவர் துவான் இபுராகிம் துவான் மான், ம.சீ.ச. தலைவர் வீ கா சியோங், பெஜுவாங் கட்சியின் தலைவர் துன் டாக்டர் மகாதீர், வாரிசான் கட்சியின் தலைவர் ஷாஃபி அப்டால் ஆகியோர் சந்தித்தனர்.

காலை மணி 11.00 : மாமன்னரை அம்னோ கட்சித் தலைவரடகமாட் ஸாஹிட் ஏறத்தாழ ஒரு மணி நேரம் சந்துத்துள்ளார்.

நாடாளுமன்றம் மீண்டும் கூட வேண்டும் என அரண்மனை நுழைவாயிலில் காத்திருந்த செய்தியாளர்களிடம் ஸாஹிட் தெரிவித்தார்.

நாட்டின் மக்களாட்சி முறை இதன் வழி நிலைநிறுத்தப்படும் எனவும், நாட்டின் ஆட்சியமைப்பு முறையில் சீரமைக்கப்பட வேண்டியவைகள் கவனிக்கப்பட வேண்டும் என அவர் கூறினார்.

மாகெரான் அமைப்பு குறித்து வினவியபோது அது குறித்து விவாதிக்கப்படவில்லை என ஸாஹிட் தெரிவித்தார்.

காலை மணி 9.54 : மூன்றாவது நாளான இன்று அம்னோ கட்சியின் தலைவர் அகமாட் அரண்மனையின் இரண்டாவது நுழைவாயிலின் வழியாக மாமன்னரைச் சந்திக்கச் சென்றுள்ளார்.

வெள்ளி நிற Vellfire வகை வாகனத்தில் அவர் அரண்மனைக்கு வந்திருந்தார்.

முதல் நாள் மாமன்னரைச் சந்தித்த அரசியல் தலைவர்கள், கோவிட்-19, பொருளாதாரம், ஊரடங்கு போன்ற விவகாரங்களை மாமன்னருடன் கலந்து பேசியதாகத் தெரிவித்தனர்.

நேற்று, இயங்கலை வழி மாமன்னரைச் சந்தித்த துன் மகாதீரிடம் பொதுத் தேர்தல் நடத்தப்படக்கூடிய காலம் குறித்து மாமன்னர் பேசியதாக அவர் தெரிவித்தார்.

மேலும் GPS கட்சித் தலைவர்களும் எதிர்வரும் திங்கட்கிழமை (ஜூன் 14) இயங்கலை வாயிலாக மாமன்னரைச் சந்திப்பார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

GPS என்பது சரவாக் மாநில அரசியல் கட்சிகளின் கூட்டமைப்ப்பாகும்.அதில் PBB, PRS, PDP, SUPP ஆகியக் கட்சிகள் உறுப்பியம் பெற்றுள்ளன.

தொடர்ந்து, ஜூன் 16 ஆம் நாள் மாமன்னரின் அழைப்பினை ஏற்று மலாய் ஆட்சியாளர்களின் சிறப்புக் கூட்டத்தை நடத்தும் என அரண்மனை தெரிவித்துள்ளது.

அக்கூட்டத்தில் கோவிட்-19 க்கு எதிரானப் போராட்ட நடவடிக்கைகள் குறித்தும் தற்போதைய ஊரடங்கு குறித்தும் விவாதிக்கப்படும்.