Homeஉலகம்தென் ஆப்பிரிக்காவில் கோவிட்-19 மூன்றாவது அலை !

தென் ஆப்பிரிக்காவில் கோவிட்-19 மூன்றாவது அலை !

தென் ஆப்பிரிக்கா | ஜூன் 11 :-

கடந்த 24 மணி நேரத்தில் தென் ஆப்பிரிக்காவில் கோவிட்-19 பெருந்தொற்றால் 9.149 பேர் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து அங்கு தற்சமயம் மூன்றாவது அலை உருவெடுத்துள்ளது என அந்நாட்டு தேசியத் தொற்று நோய் மையம் தெரிவித்துள்ளது.

 கடந்த ஒரு வாரத்தில் அன்றாட நேர்வுகள் 5,000க்கும் மேல் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 844 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் 127 பேர் இந்நோயால் மரணமடைந்துள்ளனர்.

கௌதெங் பகுதியில் ஏறத்தாழ 61 விழுக்காடு புதிய நேர்வுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

கிழக்கு கேப் சுற்றுலாப் பகுதியில் 10 % நேர்வுகளும் ஃப்ரீ ஸ்டேட் , நோர்த் வெஸ்ட் பகுதியில் 6 % நேர்வுகளும் பதிவாகியுள்ளன.

ஒட்டு மொத்தமாக ஒப்பிடுகையில், இந்தக் கண்டத்திலேயே இது வரையில் தென் ஆப்பிரிக்காவில் மட்டும் 12,044,072 பேர் கோவிட்-19 ஆல் பாதிக்கப்பட்டுள்ளனர்.

spot_img

latest articles

explore more