கோலாலம்பூர் | ஜூன் 17 :-
திங்கள், 21 ஜூன்
உடாரியான் (Udaariyaan) (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)
கலர்ஸ் ஹிந்தி எச்டி (அலைவரிசை 116), இரவு 9 மணி, திங்கள்–வெள்ளி | ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக ஸ்ட்ரீம் செய்து மகிழுங்கள்
நடிகர்கள்: இஷா மல்வியா, பிரியங்கா சௌத்ரி & அங்கித் குப்தா
பஞ்சாபில் ஒரு சிறிய கிராமத்தில் வசிக்கும் ஜஸ்மீன், கனடாவுக்குச் சென்று ஒரு மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ வேண்டும் என கனவுக் காண்கிறாள். ஃபத்தே எனும் நபர் தன்னை தீவிரமாகக் காதலிப்பதையும் தன் கனவுகளை நிறைவேற்ற விரும்புவதையும் அவள் அறியவில்லை.
ராமராஜன் 2.0 (புதிய அத்தியாயங்கள் – 15-19 )
ஆஸ்ட்ரோ விண்மீன் எச்டி (அலைவரிசை 202), இரவு 9 மணி, திங்கள்-வெள்ளி |ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக ஸ்ட்ரீம் செய்து மகிழுங்கள்
நடிகர்கள்: டத்தோ ஸ்ரீ டத்தின் கீதாஞ்சலி, தோக்கோ சத்தியா, தாஷா கிருஷ்ண குமார், ஃபாக்ஸி, தெடி, விக்ரன் இளங்கோவன், குபேன் மகாதேவன், அக்ஷ்ரா நாயர், சாந்தினி சந்திர போஸ், பென் ஜி, சஹா சேம்ப், ராகேஷ் எனும் ராக்கெட் & அல்வின் மார்த்தின் சத்தியாவூ
பூர்வாவின் பணிக் கோப்புகள் இணையத்தில் கசியவே அவளுக்குச் சட்டச் சிக்கல்கள் ஏற்படுகின்றன. ராமராஜனையும் அவரது குடும்பத்தினரையும் பழிவாங்கும் அடுத்தத் திட்டத்தைக் குறித்து விவாதிக்கச் சாரு மற்றும் அருணா ஆகியோரை நிலா சந்திக்கிறார்.
வியாழன், 24 ஜூன்
சுக்ரானு (Shukranu) (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)
BollyOne HD (அலைவரிசை 251), இரவு 9 மணி | ஆஸ்ட்ரோ கோ வாயிலாக ஸ்ட்ரீம் செய்து மகிழுங்கள்
நடிகர்கள்: திவ்யெண்டு, ஸ்வேதா பாசு பிரசாத் & ஷீட்டல் தக்கூர்
உண்மையானச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட இக்கதையில் மிகவும் எதிர்பார்த்த தனது திருமணத்தின் சில நாட்களுக்கு முன்பு கட்டாயப் படுத்தப்பட்டு மணமகனுக்குக் கருத்தடைச் செய்யப்படுகிறது.
அழகிய தமிழ்மகள் (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)
ஆஸ்ட்ரோ விண்மீன் எச்டி (அலைவரிசை 202), இரவு 7.30 மணி, திங்கள்-வெள்ளி |ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக ஸ்ட்ரீம் செய்து மகிழுங்கள்
இந்தத் தொடர் ஐந்து தனித்துவமானப் பெண்களின் வாழ்க்கையைச் சித்தறிக்கின்றது. அவர்களின் ஊக்கமுடைமை, அவற்றின் பலம் மற்றும் பலவீனங்கள் மற்றும் வாழ்க்கையில் சிக்கல்களைக் கையாளும் முறைகள் என பலவற்றைத் தாங்கி மலர்கின்றது. சவால்கள் மற்றும் அவை புகட்டியப் பாடங்கள் உட்பட இப்பெண்களுக்குத் தனிப்பட்ட அனுபவங்களும் உள்ளன. இவ்வனுபவங்கள் அவர்களைச் சிறந்தவர்களாக வடிவமைக்கின்றன. குடும்பம், வேலை மற்றும் உறவுகள் உள்ளிட்ட பல்வேறு கருப்பொருள்களையும் இந்தத் தொடர் தாங்கி மலர்கின்றது.
வெள்ளி, 25 ஜூன்
தேன் (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)
ஆஸ்ட்ரோ தங்கத்திரை எச்டி (அலைவரிசை 241), இரவு 9 மணி | ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக ஸ்ட்ரீம் செய்து மகிழுங்கள்
நடிகர்: தருன்குமார்
சவக்கிடங்கு வண்டிக்குப் பணம் செலுத்த முடியாத நிலையில், இறந்த தன் மனைவியை தகனம் செய்வதற்காகத் தூக்கிச் சென்ற ஏழை கணவரின் நிஜ வாழ்க்கைச் சம்பவம்.
சனி, 26 ஜூன்
ஜுர்மனா (Jurmana) (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)
கலர்ஸ் ஹிந்தி எச்டி (அலைவரிசை 116), மதியம் 2.30 மணி | ஆஸ்ட்ரோ கோ வாயிலாக ஸ்ட்ரீம் செய்து மகிழுங்கள்
நடிகர்கள்: அமிதாப் பச்சன், ராக்கி & வினோத் மெரா
பணத்தின் சக்தியை நம்பும் இந்தர் எனும் ஒப்பந்தக்காரர், ஒரு எளியப் பெண்ணான ராமாவைத் தன்னால் கவர்ந்திழுக்க முடியும் என தனது நண்பர், பிரகாஷுடன் ஒரு பந்தயம் கட்டுகிறார். இந்தரின் அழகில் ராமா கவர்ந்திழுக்கப்பட்டாளும் ஒரு நிகழ்வு அவளை நகரத்தை விட்டு வெளியேறத் தூண்டுகிறது.
கோலியொன் கி ராஸ்லீலா ராம்-லீலா (Goliyon Ki Raasleela Ram-Leela) (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)
கலர்ஸ் ஹிந்தி எச்டி (அலைவரிசை 116), இரவு 10 மணி | ஆஸ்ட்ரோ கோ வாயிலாக ஸ்ட்ரீம் செய்து மகிழுங்கள்
நடிகர்கள்: தீபிக்கா படுகோனே & ரன்வீர் சிங்
ராம் மற்றும் லீலாவின் காதல் மற்றும் அவர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டக் கதை.