Homeஅரசியல்ஆகஸ்டு மாத முதல் வாரத்தில் நெ.செம்பிலான் சட்டமன்றக் கூட்டம் !

ஆகஸ்டு மாத முதல் வாரத்தில் நெ.செம்பிலான் சட்டமன்றக் கூட்டம் !

சிரம்பான் | 23/6/2021 :-

நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்றக் கூட்டம் ஆகஸ்டு மாதம் முதல் வாரத்தில் நடக்கும் என அம்மாநில முதல்வர் டத்தோ ஶ்ரீ அமினுடின் ஹாருன் தெரிவித்தார்.

நேரடியாக நடத்தப்பட இருக்கும் அந்தக் கூட்டத்திற்கு மாநில யாங் டி பெர்துவான் பெசார் நெகிரி செம்பிலான் துவான்கு முஹ்ரிஸ் அல்மர்ஹும் துவான்கு முனாவிர் அவர்களின் ஒப்புதல் நேற்று கிடைத்ததாக அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பான நோட்டிஸ்கள் அனுப்பப்பட்டு விட்டன. ஆகக் கடைசியாக 3/12/2020 நெகிரி செம்பிலான் சட்டமன்றக் கூட்டம் நடைபெற்றது.

கடந்த 18 ஆம் நாள் மாமன்னரின் கட்டளையின்படி, நெகிரி செம்பிலான் மாநிலம் தனது சட்டமன்றக் கூட்டத்தை நடத்தத் தயாராக உள்ளது என அவர் மேலும் சொன்னார்.

spot_img

latest articles

explore more