பெட்டாலிங் ஜெயா, ஜூன் 23-
கால்பந்து விளையாட்டில் அதிக ஆர்வம் கொண்ட மாணவர்கள் கல்வியிலும் சிறந்து அடைவு நிலையைப் பதிவு செய்வது வரவேற்கத்தக்க ஒன்றாகும். ஆனால் கல்வியில் சற்று பின்தங்கிய மாணவர்கள் விளையாட்டில் மிகவும் ஆர்வமாக இருக்கும் தருணத்தில் கல்வியைத் தொலைக்கும் சம்பவங்களும் நடக்கின்றன.
அப்படிப்பட்ட மாணவர்களைக் கண்டறிந்து அவர்களைக் கல்வியாளர்களாக உருவாக்குவதோடு கால்பந்து விளையாட்டுத் துறையில் சிறந்த எதிர்காலத்தை அமைத்துத் தருவதற்கான நடவடிக்கையைச் சைபர்லின்க்ஸ் உலகளாவிய கல்லூரி முன்னெடுக்கின்றது.
இந்தக் கல்லூரியில் பல்வேறு துறைகளில் சான்றிதழ், டிப்ளோமா பட்டம் பெறுவதற்குக் கல்வி வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. அதேநேரத்தில் கால்பந்து துறையில் சாதிக்க நினைக்கும் மாணவர்களுக்கான பயிற்சிகளும் வழங்கப்படுகின்றன.
பெட்டாலிங் ஜெயாவில் பிரமாண்ட தோற்றத்தோடு செயல்படும் இந்தக் கல்லூரி மலேசிய மாணவர்களின் கவனத்தை ஈர்த்தது மட்டுமின்றி உலகளாவிய நிலையிலும் சிறந்த வரவேற்பு பெற்றிருக்கின்றது.

காலையில் கல்வி சார்ந்த நடவடிக்கைகளை முன்னெடுக்கும் நேரத்தில் மதியம் கால்பந்து பயிற்சியும் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. மாநில, தேசிய நிலையில் கால்பந்தாட்ட அனுபவங்களைப் பெற்ற பயிற்றுநர்கள் மாணவர்களுக்குப் பயிற்சிகளை வழங்குவது கூடுதல் சிறப்பாகும்.
இந்தக் கல்லூரியின் வாய்ப்புகளை இந்திய மாணவர்களும் முறையாகப் பயன்படுத்திக் கொண்டு சிறந்த எதிர்காலத்தை அமைத்துக் கொள்ள வேண்டுமென அதன் தலைவர் டத்தோ நாதன் கேட்டுக் கொண்டார்
இந்தக் கல்லூரியில் உபகாரச் சம்பளம் உட்படக் கடனுதவி பெற்று கல்வியை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. குறிப்பாகக் கணக்காய்வாளர், வர்த்தகத் துறையில் சான்றிதழ் பெறுவதற்கான கல்வி வாய்ப்புகள் உள்ளன.
இத்துடன் டிப்ளோமா படிகக் வேண்டுமென்ற எண்ணம் கொண்ட மாணவர்கள், கணக்காய்வாளர், வர்த்தக நிர்வாகம், கணினி அறிவியல், குற்றவியல் நீதி, மேலாண்மை நிர்வாகம், ஃபேஷன், கால்பந்து ஆய்வு, அடிப்படை போலீஸ் விசாரணை, பாதுகாப்பு நிர்வாகம், மென்பொருள் பொறியியல், இலக்கமுறை நிர்வாகம், தொழிலாளர் பாதுகாப்புச் சுகாதாரம் போன்ற துறைகளையும் தேர்தெடுக்கலாம் என அவர் அறிவுறுத்தினார்.

சில துறைகளில் மேற்கல்வி பயில்வதற்கு ஊக்குவிப்பு தொகையும் வழங்கப்படுகின்றது. தங்குமிட வசதி, போக்குவரத்து, உணவு என அடைப்படை வசதிகள் ஏற்பாடு செய்து தரப்படுகின்றன. மேல் விவரங்களுக்கு மகேஸ், 016 686 6609, ராஜ்குமார் 017 226 8282 ஆகியோரை அணுகலாம்.





