Homeவர்த்தகம்SP Care தனியார் கிளினிக்கின் 24 மணி நேர உணவு வங்கி !

SP Care தனியார் கிளினிக்கின் 24 மணி நேர உணவு வங்கி !

இரவாங் | 6/7/2021 :-

இங்குள்ள தனியார் கிளினிக் ஒன்று தனது சுற்று வட்டார மக்களுக்கு அடுப்படைத் தேவைக்கானப் பொருட்களையும் உணவுப் பொருட்களையும் கொண்ட உணவு வங்கியை உருவாக்கியுள்ளது.

SP Care கிளினிக்கின் தோற்றுநர் டாக்டர் சத்திய பிரகாஷ் இது குறித்து தெரிவிக்கயில், கோவிட்-19 பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட சுற்று வட்டார மக்களுக்கு தங்களின் சுமூகப் பொறுப்பை ஆற்றும் வகையில் இந்த முன்னெடுப்பு அமைகிறது என அவர் குறிப்பிட்டார்.

இரவாங் முத்தியாரா பகுதியில் அமைந்திருக்கும் SP Care கிளினிக்கின் அருகிலேயே இந்த உணவு வங்கி அமைந்துள்ளது.

பாதிக்கப்பட்டவர்கள் எந்த வித விதிமுறையும் இன்றி தங்களுக்குத் தேவையான பொருட்களை மட்டும் எடுத்துக் கொள்ளலாம் எனவும் அப்போது அவர்கள் தங்களின் அடையாள அட்டையைக் காட்டி பதிவு செய்ய வேண்டியதில்லை என டாக்டர் சத்திய பிரகாஷ் தெரிவித்தார்.

அதே வேளையில், மற்றவர்களின் தேவையை உணர்ந்து தங்களுக்குத் தேவையான அளவு மட்டுமே பொருட்களை எடுத்துக் கொள்ளவும் அமைக்கப்பட்ட உணவு வங்கி மறைகாணி வழி கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் பொது மக்களை அவர்  நினைவுறுத்தினார்.

அரிசி, சமையல் எண்ணெய், சார்டின், குழந்தைகளுக்கான பால் மாவு, முட்டை, சீனி, உப்பு, காயா, கிச்சாப், மீ, பீகூன், பால், மைலோ, ரொட்டி போன்ற உணவுப் பொருட்கள் அந்த உணவு வங்கியில் கிடைக்கும்.

மேலும், குளியல் வழலை, பற்பசை, பல் தூரிகை போன்ற அடிப்படைப் பொருட்களும் அங்கு வைக்கப்பட்டிருக்கும்.

உணவு வங்கியைத் தொடர்ந்து தமது மற்ற மூன்று கிளை கிளினிக்குகளிலும் உணவுக் கூடை உதவியும் கிடைக்கும் என டாக்டர் சத்திய பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

உணவுக் கூடை உதவி தேவைப்படுவோர் கிளினிக்கைத் தொடர்பு கொண்டால் அது அவர்களின் வீட்டிற்கே அனுப்பி வைக்கப்படும் என அவர் மேலும் சொன்னார்.

spot_img

latest articles

explore more