Homeஅரசியல்தேசியக் கூட்டணிக்கு ம.இ.கா. – ம.சீ.ச. முழு ஆதரவு !

தேசியக் கூட்டணிக்கு ம.இ.கா. – ம.சீ.ச. முழு ஆதரவு !

கோலாலம்பூர் | 8/7/2021 :-

பிரதமர் மகியாதீன் முகம்மது யாசினுக்கான ஆதரவை அம்னோ மீட்டுக் கொண்டதைத் தொடர்ந்து தேசிய முன்னணியின் மற்ற உறுப்புக் கட்சிகள் அம்முடிவை ஏற்கவில்லை எனத் தெரிவித்துள்ளன.

அடுத்தப் பொதுத் தேர்தல் வரையில் தங்களின் ஆதரவை தொடர்ந்து வழங்கும் என திட்டமிட்டுள்ளன.

அம்னோவின் ஆதரவு துண்டிப்பு மலேசிய சீன சங்கம் மசீசவின் நிலைப்பாட்டை ஒருபோதும் மாற்றம் காணச் செய்யாது என அதன் பொதுச் செயலாளர் சோங் சின் வூன் தெரிவித்துள்ளார்.

 அம்னோவின் தலைவர் அகமாட் ஸஹிட் ஹமிடி பிரதமர் பதவி விலக வலியுறுத்தியதைக் குறிப்பிட்டு பேசிய மலேசிய இந்தியர் காங்கிரஸ் ம.இ.கா.வின் தலைவர் தான் ஶ்ரீ விக்னேஸ்வரன், அம்முடிவை தாம் ஒரு போதும் கருதப்போவதில்லை எனக் கூறியுள்ளார்.

“அம்னோ ஒரு முதிர்ச்சி பெற்றக் கட்சி. அவர்களுக்கும் தெரியும். இதற்கு முன்னர், ஆளும் கட்சியாக தேசிய முன்னணி நாட்டை ஆளும்போது அபோதைய எதிர்க்கட்சிகள் அவர்களின் பிரதமரைப் பதவி விலகப் பல முறை கூறியும் அவர்கள் அப்படி செய்யவில்லை. காரணம் அது வலியுறுத்தல் மட்டுமே என அவர்களுக்கே நன்கு தெரியும்.”

பிரதமர் மகியாதீன் முகம்மது யாசினைப் பதவி விலக வலியுறுத்துவதற்கு முன்னர் தேசியக் கூட்டணியில் அங்கம் வகித்திருக்கும் தமது கட்சியின் அமைச்சர்களைப் பதவி விலகி இருக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டிருந்தார்.

நேற்றிரவு , பிரதமர் மகியாதீன் முகம்மது யாசினுக்கு வழங்கிய ஆதரவை மீட்டுக் கொண்டது மட்டும் இல்லாமல் அவர் உடனடியாக பதவி விலக வேண்டும் என அம்னோவின் உச்சமன்றம் முடிவு செய்துள்ளது.

அதே வேளையில், அம்னோ உச்சமன்றம் நேற்று இரவு எடுத்த முடிவுக்கு அதன் 38 நாடாளுமன்ற உறுப்பினர்களீன் ஆதரவு என்ன நிலையில் உள்ளது என்பது இன்னும் அறியப்ப்படவில்லை. அதில் பெரும்பான்மையினர் இஸ்மாயில் சப்ரிக்கும் ஹிஷாமுடினுக்கும் ஆதரவாக இருப்பார்கள் என நம்பப்படுகிறது.

டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப்பை நாட்டின் துணைப் பிரதமராகவும் டத்தோ ஶ்ரீ ஹிஷாமுடின் துன் உசேனை வெளியுறவுத் துறை அமச்சராகவும் நியமிக்கப்பட்ட விவகாரம் பிரதமர் மகியாதின் முகம்மது யாசினின் அம்னோவை சமாதானப் படுத்தி தேசியக் கூட்டணியில் இருந்து அம்னோ விலகுவதைத் தடுக்கும் முயற்சியாக நம்பப்படுகிறது.

spot_img

latest articles

explore more