Homeஅரசியல்பிரதமர் வீட்டை நோக்கி படையெடுத்த அமைச்சர்கள், தேசிய தலைமை வழக்கறிஞர்

பிரதமர் வீட்டை நோக்கி படையெடுத்த அமைச்சர்கள், தேசிய தலைமை வழக்கறிஞர்

கோலாலம்பூர் | 8/7/2021 :-

இன்று காலை தொடங்கி புக்கிட் டாமான்சாராவில் அமைந்துள்ள பிரதமர் மகியாதீன் முகம்மது யாசினின் வீட்டிற்கு சில அமைச்சர்களும் அரசின் முக்கிய அதிகாரிகளும் வருகை புரிந்துள்ளனர்.

அமைச்சர்கள், தேசிய தலைமை வழக்கறிஞர் ஆகியோரின் வாகனங்கள் பிரதமரின் வீட்டிற்கு காலை 9.40 மணி தொடங்கி வந்து சென்று கொண்டிருந்தன.

இருந்தாலும், எந்த அமைச்சர் அங்கு வருகை புரிந்தார் என அறியப்படவில்லை.

பாகோ நாடாளுமன்ற உறுப்பினருமான பிரதமர் மகியாதீன் முகம்மது யாசின் பதவி விலக வேண்டும் எனவும் தேசியக் கூட்டணிக்கான தமது ஆதரவை மீட்டுக் கொண்டுள்ளதை அம்னோ அறிவித்ததைத் தொடர்ந்து பிரதமர் மகியாதீனின் வீட்டுக்கு இந்தப் படையெடுப்புப் படலம் தொடங்கியுள்ளது.

அதில் முக்கியமாக புதிதாகத் துணைப் பிரதமராக நியமிக்கப்பட்ட டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் பிரதமரைச் சந்திக்க வந்திருந்ததை பெர்னாமா செய்தி நிறுவனம் காணொலியாக வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

spot_img

latest articles

explore more