Homeஅரசியல்நாடாளுமன்றத்தில் பிரதமர் மீதான நம்பிக்கை குறையவில்லை ! – தலைமை வழக்கறிஞர்

நாடாளுமன்றத்தில் பிரதமர் மீதான நம்பிக்கை குறையவில்லை ! – தலைமை வழக்கறிஞர்

கோலாலம்பூர் | 8/7/2021 :-

நாடாளுமன்ற உறுப்பினர்களிடயே பிரதமர் மகியாதீன் முகம்மது யாசின் மீது நம்பிக்கை இழப்பு ஏற்பட்டிருப்பதாக அரசாங்கத்திடம் எந்த விதத் தகவலும் இல்லை என நாட்டின் தலைமை வழக்கறிஞர் இட்ரூஸ் ஹாருன் தெரிவித்தார்.

நாட்டின் அரசியல் அமைப்புச் சட்டம் பிரிவு 43(2)(a)இன் படி, பிரதமர் மீது நம்பிக்கை இருக்கிறாதா அல்லது இல்லையா என நாடாளுமன்ற உறுப்பினர்களின் சொந்த விருப்பத்திற்கு உட்பட்டதே அன்றி ஒரு கட்சியின் ஊடக அறிக்கையை மட்டும் கொண்டு முடிவு செய்யப்படாது என அவர் மேலும் கூறினார்.

எனவே, சட்டப்படி பிரதமரும் தற்போதைய அமைச்சரவையும் முழு அதிகாரத்துடன் நிலைபெற்றுள்ளது என அவர் தெரிவித்தார்.

நேற்றிரவு, பிரதமர் மகியாதீன் முகம்மது யாசினுக்கு வழங்கிய ஆதரவை மீட்டுக் கொண்டது மட்டும் இல்லாமல் அவர் உடனடியாக பதவி விலக வேண்டும் என அம்னோவின் உச்சமன்றம் முடிவு செய்துள்ளது. அதனைத் தொடர்ந்து இடைக்கால பிரதமர் நியமிக்கப்பட வேண்டும் எனவும் அகமாட் ஸாஹிட் கூறியிருந்தார்.

ஆனால், அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் நிலைப்பாடு குறித்து ஏதும் அவர் குறிப்பிடவில்லை.

ஆனால், அது குறித்த முடிவை அவர்களிடமே விட்டுவிட்டதாகவும் நாடாளுமன்றத்தில் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவரப்படும் சூழலில் அப்போது தங்களின் சொந்த விருப்பத்திற்கேற்ப வாக்களிக்கலாம் எனக் கூறியிருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

spot_img

latest articles

explore more