Homeஅரசியல்அம்னோவின் ஆதரவு துண்டிப்பு : மாமன்னரை பிரதமர் மகியாதீன் சந்திக்கவில்லை ! – பிரதமர் துறை

அம்னோவின் ஆதரவு துண்டிப்பு : மாமன்னரை பிரதமர் மகியாதீன் சந்திக்கவில்லை ! – பிரதமர் துறை

கோலாலம்பூர் | 8/7/2021 :-

பிரதமர் மாமன்னரைச் சந்திக்கப்போவதாகப் பரவி வரும் தகவலில் உண்மை இல்லை என பிரதமர் துறை மறுத்துள்ளது.

நேற்றிரவு, பிரதமர் மகியாதீன் முகம்மது யாசினுக்கு வழங்கிய ஆதரவை மீட்டுக் கொண்டது மட்டும் இல்லாமல் அவர் உடனடியாக பதவி விலக வேண்டும் என அம்னோவின் உச்சமன்றம் முடிவு செய்துள்ளதைத் தொடர்ந்து அத்தகவல் ஊடகங்களில் பரவி வருகிறது.

அந்தச் செய்தியில் உண்மையில்லை என பிரதமர் துறை விளக்கியுள்ளது.

தற்போதைய அரசியல் நெருக்கடி விவகாரங்களில் மாமன்னரின் தலையீடு இன்னும் ஏற்படவில்லை.

பிரதமர் மகியாதீன் தமது பதவியில் இருந்து விலகுவதாகவும் தெரியவில்லை.

முன்னதாக, நாடாளுமன்ற உறுப்பினர்களிடயே பிரதமர் மகியாதீன் முகம்மது யாசின் மீது நம்பிக்கை இழப்பு ஏற்பட்டிருப்பதாக அரசாங்கத்திடம் எந்த விதத் தகவலும் இல்லை என நாட்டின் தலைமை வழக்கறிஞர் இட்ரூஸ் ஹாருன் தெரிவித்திருந்தார்.

பிரதமர் மீது நம்பிக்கை இருக்கிறாதா அல்லது இல்லையா என நாடாளுமன்ற உறுப்பினர்களின் சொந்த விருப்பத்திற்கு உட்பட்டதே அன்றி ஒரு கட்சியின் ஊடக அறிக்கையை மட்டும் கொண்டு முடிவு செய்யப்படாது என அவர் கூறினார்.

அம்னோ 38 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டிருந்தாலும் அனைவரும் அக்கட்சியின் தலைவர் அகமட் ஸாஹிட் ஹமிடியின் முடிவுக்கு ஆதரவு அளிப்பார்கள் என உறுதியாகக் கூற முடியாது.

spot_img

latest articles

explore more