Homeஅரசியல்தாப்பா நாடாளுமன்றத் தொகுதி மக்களுக்கு 37,000 உணவுக் கூடைகள் !

தாப்பா நாடாளுமன்றத் தொகுதி மக்களுக்கு 37,000 உணவுக் கூடைகள் !

தாப்பா | 9/7/2021 :-

கோவிட்-19 பெருந்தொற்றூத் தாக்கத்தால் பாதிப்படைந்த தாப்பா நாடாளுன்றத் தொகுதி மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என மனிதவளா அமைச்சரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோ ஶ்ரீ மு. சரவணன் தெரிவித்தார்.

அண்மையில் பிரதமர் மகியாதீன் முகம்மது யாசின் அறிவித்த மக்கள் நலக்காப்பு & பொருளியல் மீட்பு தொகுப்புத் திட்டத்தின்கீழ் இந்த உதவி வழங்க்கப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டார்.

பெருந்தொற்றுக் காலத்தில் நலிந்தோருக்கு உதவ ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினருக்கும் ரி.ம. 300,000 நிதி ஒதுக்கீடு அத்திட்டத்தின்வழி ஒதுக்கப்பட்டது.

கோவிட்-19ஆல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசின் பரிவை இந்த முன்னெடுப்பு காட்டுவதாக டத்தோ ஶ்ரீ சரவணன் கூறினார்.

இம்முறை தாப்பாவில் 7,000 உணவுக் கூடைகள் வழங்கப்பட்டுள்ளன.

நடமாட்டக் காட்டுப்பாட்டு ஆணை விதிக்கப்பட்டதில் இருந்து இன்று வரை ஏறத்தாழ 37,000 உணவுக் கூடைகள் வழங்கப்பட்டுள்ளன.

இப்பெருந்தொற்றுக் காலத்தில் தாப்பாவில் உதவி தேவைப்படும் உதவி தேவைப்படும் மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு உதவிகல் வழங்கப்படுவதை உறுதி செய்வதாக அவர் தெரிவித்தார்.

மேலும், உதவி தேவைப்படும் தாப்பா தொகுதி மக்கள் தன்னைத் தொடட்பு கொள்ளத் தயங்க வேண்டாம் என டத்தோ ஶ்ரீ சரவணன் மேலும் சொன்னார்.

spot_img

latest articles

explore more