Homeமலேசியாகடுமையாக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைப் பகுதியில் பெரிய அளவில் பரிசோதனைகள் அதிகமான நேர்வுகளுக்குக் காரணம் !

கடுமையாக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைப் பகுதியில் பெரிய அளவில் பரிசோதனைகள் அதிகமான நேர்வுகளுக்குக் காரணம் !

ஷா ஆலாம் | 10/7/2021 :-

நேற்று மிக அதிகமான கோவிட்-19 நேர்வுகள் மிக அதிகமாகப் பதிவு செய்யப்பட்டதற்கு அதிகமான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதே காரணம். குறிப்பாக கோலாலம்பூர் வட்டாரத்தில் கடந்த இரு வாரங்கள் மிக அதிகமான நேர்வுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என கூட்டரசு பிரதேச அமைச்சர் அன்னுவார் மூசா கூறினார்.

கட்டுமானப் பகுதிகளை உட்படுத்திய பெரிய அளவில் நடத்தப்பட்ட கோவிட்-19 பரிசோதனை ஒரு முக்கியக் காரணாம் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

சிலாங்கூர் – கோலாலம்பூரின் பல பகுதிகளில் கடுமையாக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை விதிக்கப்பட்டது.

அவ்வாறு செய்யப்படும் போது, அப்பகுதியில் பெரிய அளவில் கோவிட்-19 பரிசோதனை (mass PCR testing) செய்யப்படும். இதனால், பல்லாயிரக்கணக்கானோர் இதில் உட்படுத்தப்படுவர். அதன் கணக்கெடுப்பு அன்றாடம் பதிவு செய்யப்பட்டு அறிவிக்கப்படும்.

எனவே தான், கடந்த இரு வாரக் காலக்கட்டத்தில் நேர்வுகளின் பதிவு அதிகரித்துள்ளது. மேலும், கோலாலம்பூரில் கட்டுமானப் பகுதிகளில் கவனம் செலுத்த முடிவு செய்ததாக அவர் தமது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

மலேசிய வரலாற்றில் நேற்று மிக அதிகமான நேர்வுகள் பதிவு செய்யப்பட்டிருந்தது. சிலாங்கூரில் 4,400 நேர்வுகள் பதிவு செய்யப்பட்டுள்ள வேளையில், கோலாலம்பூரில் 1,271 நேர்வுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதே நேரம், தடுப்பூசி போடப்படுவதை துரிதப்படுத்தியுள்ளோம். இந்த இரண்டு வாரங்களில் குறைந்தது 50%க்கும் மேல் இரண்டாம் தடுப்பூசி போடப்பட்டிருக்கும் என அவர் கூறினார். 3ஆம் – 4ஆம் கட்ட கோவிட்-19 நோயாளிகளின் எண்ணிக்கை குறையும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. மேலும், 2 தடுப்பூசி போடப்பட்டவர்ளுக்கு  1ஆம் – 2ஆம் கட்ட கோவிட்-19 நோய் தாக்கம் பெரிய ஆபத்தைக் கொண்டு வராது என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

spot_img

latest articles

explore more