Homeமலேசியாகிள்ளான் மருத்துவமனைக்கு கூடுதல் படுக்கைகள் இன்று கிடைத்தது !

கிள்ளான் மருத்துவமனைக்கு கூடுதல் படுக்கைகள் இன்று கிடைத்தது !

கிள்ளான் | 12/7/2021 :-

கிள்ளானில் உள்ள தெங்கு அம்புவான் இரகிமா மருத்துவமனைக்கு இன்று 151 கூடுதல் படுக்கைகளை சுகாதார அமைச்சு வழங்கியுள்ளது. இது வரையில் 606 கட்டில்கள் கிடைத்துள்ளன.

சுகாதார அமைச்சின் தலைமைச் செயலாளர் முகம்மட் ஷஃபிக் இது குறித்து பேசுகையில், அம்மரித்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள படுக்கைகளின் எண்ணிக்கை 51 இல் இருந்து 72 ஆக மிக விரைவில் அதிகரிக்கப்படுகிறது.

சமூக ஊடகங்களில் அண்மையில் இம்மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் ஏற்பட்டுள்ள வசதி குறைபாட்டை அப்படியே விட்டு விடப் பட்டதாக கருதப்பட்டு உண்மையில்லை. ஆனால், அந்த மருத்துவமனையில் அனுமதிகப்பட இருக்கும் நோயாளிகளை வார்டுகளுக்கு அனுப்பும் முன்னர் காத்திருக்கும் இடமாக அது உருவாக்கப்பட்டது என அவர் தெரிவித்தார்.

மருத்துவமனையில் நடத்தப்பட்ட கண்காணிப்பின் முடிவில் கோவிட்-19 நோயாளிகளுக்கு 19 படுக்கைகள் அதிகப்படுத்தப்பட்டுள்ளது.

 முன்னதாக, தெங்கு அம்புவான் இரகிமா மருத்துவமனையின் பயிற்சி மருத்துவர்கள் தங்கும் விடுதியும் அன்றாட சிகிச்சை மையமும் கோவிட்-19 நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்க தற்காலிக வார்டாக கடந்த வெள்ளிக்கிழமை முதல் மாற்றப்பட்டது.

கோவிட்-19 பெருந்தொற்றைக் கையாள கூடுதல் மருத்துவக் கருவிகள் குறித்து அவர் தெரிவிக்கயில், ரி.ம. 747 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார்.

சிலாங்கூர் மாநிலத்தில் ரி.ம. 100 மில்லியன் வழங்கப்பட்டுள்ளது. வழக்கமான நெறிமுறைகள் இல்லாமல் நேரடியாக வழங்கப்படுகிறது எனவும் அதற்காக அரசுக்கு நன்றியும் தெரிவித்தார்.

spot_img

latest articles

explore more