ஆயேர் கெரோ | 12/7/2021 :-
“கொலைகார அரசான்ங்கம்” எனும் வாசகத்தை எழுதி மலாக்கா ஆயேர் கெரோ துன் அப்துல் இரஸாக் சாலையில் உள்ள மேம்பாலத்தில் தொங்கவிடப்பட்டிருந்தது.
மாநில அரசாங்கக் கட்டடமான ஶ்ரீ நெகிரிக்கு அருகாமையில் அந்த பொம்மை கண்டறியப்பட்டது என சீன நாளிதழான ஓரியண்டல் டெய்லி தகவல் வெளியிட்டிருந்தது.
அந்த பொம்மைக்கு இள நீல நிற காற்சட்டையும் வெள்ளை நிற மேல் சட்டையும் கைவினைப் பொருளால் செய்யப்பட்ட தொப்பியும் அணிவிக்கப்பட்டிருந்தது. அத்துடன், கொலைகார அரசாங்கம் எனும் வாசகமும் சிவப்பு நிறத்தில் எழுதியிருந்தது.
அந்த பொம்மையை காவல் துறை அதிகாரிகள் அங்கிருந்து அகற்றிவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
கடந்த மே மாதம், “தோல்வியடைந்த ஆரசாங்கம்” என சுங்கை மலாக்கா வட்டாரத்தில் ஆங்காங்கே எழுதப்பட்டிருந்தது.
நேற்று கோவிட்-19 அன்றாட நேர்வுகள் 9,000க்கும் மேல் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் மிக அதிகமாக 9,353 எனப் பதிவி செய்யப்பட்டது.


