ஈப்போ, ஜூலை 16-
இந்த நாட்டில் இந்தியர்களின் பலத்தை வலுப்படுத்தவும் உரிமையை தட்டிக்கேட்க வும் இந்திய வாக்காளர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கவேண்டும் என்று மஇகா தேசியத் துணைத் தலைவரும் , துணை அமைச்சருமான டத்தோஸ்ரீ எஸ்.கே தேவமணி வலியுறுத்தினார். அண்மையில் மஇகா தலைவர்கள் இந்திய வாக்காளர்கள் எண்ணிக்கை அதிகரிக்க சிறப்பான முறையில் சேவையை மேற்கொண்டு வந்துள்ளனர். இருந்தபோதும் மேலும் பலர் இன்னும் வாக்காளர்களாக பதிவு செய்யாமல் இருந்து வருவது கவலை அளிப்பதாக உள்ளது என்று குறிப்பிட்டார்.
தற்பொழுது மஇகாவில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டு வருகிறார்கள் மற்றும் ஏற்கெனவே கட்சி உறுப்பினர்களாக சேர்ந்துள்ள பலர் வாக்களார்களாக பதிவு செய்யப்பட்டுள்ளனரா என்பதையும் சரிபார்க்கவேண்டும் என்று நேற்று இங்குள்ள ஏ.கே. எஸ். மண்ட
பத்தில் பத்துகாஜா தொகுதி காங்கிரஸ் 24 ஆம் ஆண்டு மாநாட்டை தொடக்கி வைத்து ஆற்றிய உரையில் இவ்வாறு பேசினார்.
மேலும் பேசிய அவர், கிளந்தான் மாநிலத்தில் அமல்படுத்தியுள்ள ஹூடுட் சட்டத்தின் வழி பொது இடத்தில் பிரம்படி தண்டனை விவகாரம் குறித்து பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப்பிடம் மஇகா பேசியுள்ளதால் அந்தச் சட்டத்தை அமல்படுத்துவதை மஇகா எதிர்ப்பதாகவும் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் தலைமையுரையாற்றிய புலிகேசி, பத்துகாஜா நாடாளுமன்றத் தொகுதியில் 13,500 இந்திய வாக்காளர்கள் உள்ளனர். ஜெலப்பாங் சட்டமன்றத்தில் 8300 இந்திய வாக்காளர்கள் உள்ளனர். அதில் 2500 புதிய வாக்காளர்கள் பதிவு செய்துள்ளனர் இந்த வாக்குகள் இந்த முறை தேசிய முன்னணிக்குக் கிடைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
