Homeமலேசியாகவனத்தை உடைகளில் செலுத்துவதை விட தடுப்பூசியை போடுவதில் செலுத்துங்கள் !

கவனத்தை உடைகளில் செலுத்துவதை விட தடுப்பூசியை போடுவதில் செலுத்துங்கள் !

கோலாலம்பூர் | 23/7/2021 :-

தடுப்பூசி மையங்களில் ஆடைகள் குறித்த விதிமுறைகள்  அவசியமில்லை என்று மலேசிய மருத்துவச் சங்கம் (எம்.எம்.ஏ.) தெரிவித்துள்ளது.

அதற்குப் பதிலாக, கோவிட் -19 தொற்றைக் கட்டுப்படுத்த அதிகத் தடுப்பூசிகளைச் செலுத்துவதில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என அதன் தலைவர் டாக்டர் சுப்பிரமணியம் தமது பரிந்துரையை முன்வைத்துள்ளார்.

முன்னதாக, இரண்டு தடுப்பூசி மையங்களில் அணிந்து வரும் ஆடைகள் குறித்த விதிமுறையைக் கடைப்பிடிக்காத இருவருக்குத் தடுப்பூசி போட மறுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

மற்றொரு தடுப்பூசி மையம் அதன் முகநூல் பக்கத்தில் அங்கு அணிந்து வர வேண்டிய ஆடைகள் குறித்த விதிமுறைகளையும் வழிகாட்டலையும் அறிவித்தது.

அத்தகைய விதிமுறைகள் தேவையில்லை என்று கூறிய டாக்டர் சுப்ரமணியம், சுகாதாரம் தொடர்பான விவகாரங்களில் ஆடைகள் தொடர்பான விதிமுறைகளை தேவையில்லை எனவும் தடுப்பூசிக்கான நேர்முகச் சந்திப்புத் தேதி இருந்தாலே அவர்களை தடுப்பூசி மையங்களுக்குள் அனுமதிக்க வேண்டும். எனக் குறிப்பிட்டார்,

அதிகமானோருக்குத் தடுப்பூசி வழங்கப்படுவதே தற்போதைய முதனை நோக்கமாக இருக்க வேண்டும். புறக்கணிப்பதற்கான நேரம் இதுவாகாது என டாக்டர் சுப்ரமணியம் மேலும் தெரிவித்தார்.

spot_img

latest articles

explore more