கோலாலம்பூர் | 23/7/2021 :-
ஊரடங்கு தொடங்கியது முதல், நாடாளுமன்ற சிறப்பு செயற்குழுவின் சந்திப்புக் கூட்டம் இன்று நடத்தப்பட்டது. அதில் சுகாதாரம், அறிவியல், புத்தாக்கத் தேர்வுக் குழுவின் விவாதங்களுடன் நடந்தது.
சுகாதார அமைச்சின் தலைமை இயக்குநர் தான் ஶ்ரீ டத்தோ ஶ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா, தேசிய கோவிட் -19 நோய்த்தடுப்பு திட்டத்தின் ஒருங்கிணைக்கும் அறிவியல், புத்தாக்க அமைச்சின் மூத்த அதிகாரி ஆகியோரின் கருத்துகளை செவிமெடுக்க இக்கூட்டம் நடபெறும்.
இது குறித்து தகவல் அளித்த பண்டார் கூட்டின் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் கெல்வின் யீ லீ, இந்தக் குழு டாக்டர் நோர் ஹிஷாமிடமின் விளக்கத்தைச் செவிமடுத்தப் பின்னர், அதிகாரிகளின் சில முடிவுகள் குறித்து கேள்வி அச்செயற்குழு எழுப்பும் என்றார்
தேசிய கோவிட் -19 நோய்த்தடுப்பு திட்டம் குறித்த கேள்விகளையும் அறிவியல், புத்தாக்க அமைச்சின் மூத்த அதிகாரியிடம் எழுப்பப்படும் எனக் கூறினார்.
நல்ல முன்னெடுப்புகளுக்கு என்றுமே பாராட்டுகளைத் தெரிவிப்போம். இது சமூகத்தின் நம்பிக்கையை உறுதி செய்ய உதவுகிறது
“தேவை இருப்பின், மேம்படுத்தப்பட வேண்டிய முக்கியமான விவகாரங்களுக்கத் தக்கப் பரிந்துரைகல் வழங்குவோம் எனவுன் டாக்டர் கெல்வின் யீ கூறினார்.
அரசாங்கத்தை மேற்பார்வையிட்டு பொறுப்புகளை எடுத்தக்கூற வேண்டும் என்பதே அச்செயற்குழுவின் தலையாயப் பணி.
குறுகிய – நீண்ட காலத்திற்கு அரசாங்கத்தால் எடுக்கப்பட்ட திட்டங்களையும் உத்திகளையும் உட்படுத்திய விளக்கத்தையும் அந்தச் செயற்குழு பெறும்.
தேசிய கோவிட்-19 நோய்த்தடுப்பு திட்டம் நிறைவடைந்தது அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்தும் விளக்கம் பெறும்.
அந்தக் கூட்டம் நாடாளுமன்றத்தில் நேரடியாக நடத்தப்படும்.
நிரந்தர ஆணையில் திருத்தம் செய்யப்படாமல் அச்சந்திப்புக் கூட்டத்தை இயங்கலையிலோ அல்லது மற்ற இடத்திலோ நடத்த முடியாது என்றும் டாக்டர் கெல்வின் யீ கூறினார்.


