கோலாலம்பூர் | 15/9/2021 :-
பெங்கெராங் நாடாளுமன்ற உறுப்பினர் அஸாலினா ஓத்மான் சயிட் இன்றூ நாடாளுமன்றத்தின் பிற்பகல் அமர்வில் மக்களவையின் துணைத் தலைவராக தற்காலிகமாகப் பொறுப்பேற்றார்.
நாடாளுமன்றக் கூட்டச் சட்டம் 7(3)இன் படி தம்மை அவ்வாறு செய்ய மக்களாவைத் தலைவர் அஸார் ஹாருன் கூறியதாக அஸாலினா தெரிவித்தார்.
அஸாலினா மக்களவையின் துணைத் தலைவராக பொறுப்பேற்றது எதிர்க்கட்சியினரிடையே ஆதரவு பெற்றது.
இதன் தொடர்பில் நம்பிக்கைக் கூட்டணியின் பாடாங் செராய் நாடாளுமன்ற உறுப்பினர் கருப்பையா அஸாலினாவுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார்
அஸாலினாவின் பொறுப்பேற்பு குறித்து நம்பிக்கைக் கூட்டணியின் பாசிர் கூடாங் நாடாளுமன்ற உறுப்பினர் ஹசான் அப்துல் கரிம் விளக்கம் கோரினார்.
அஸாலினா மீண்டும் அப்பொறுப்பேற்பதில் எந்தவித எதிர்ப்பும் இல்லை என்றாலும் அது சரியான வழிமுறையா எனவும் அவைத் தலைவரிடமிருந்து எந்தத் தகவலும் தெரிவிக்கப்படவுமில்லை என ஹசான் கூறினார்.


