Homeமலேசியாசஞ்சீவனின் டத்தோ பட்டம் மீட்டுக் கொள்ளப்பட்டது !

சஞ்சீவனின் டத்தோ பட்டம் மீட்டுக் கொள்ளப்பட்டது !

குவாந்தான் | 15/9/2021 :-

மைவாட்ச் அமைப்பின் தலைவர் ஶ்ரீ சஞ்சீவனின் டத்தோ பட்டத்தை பகாங் மாநில அரசு உடனடியாக மீட்டும் கொண்டது.

பகாங் மாநில அரசின் செயலாளர் டத்தோ ஶ்ரீ சாலேஹுடின் இஷாக் இது குறித்து தெரிவிக்கயில், டத்தோ பட்டத்தைக் கொன்டு வரும் அம்மாநிலத்தின் உயரிய விருதான Darjah Indera Mahkota Pahang (DIMP) மீட்டுக் கொள்ளும் கடிதத்தை கடந்த மாதம் 24  ஆம் நாள் வெளியிடப்பட்டது எனக் குறிப்பிட்டார்.

தற்போது மாமன்னராக வீற்றிருக்கும் பகாங் மாநில சுல்தானின் கட்டளைக்கு இணங்க அந்த டத்தோ பட்டம் மீட்டுக் கொள்ளப்பட்டது.

இதன்படி, சஞ்சீவன் இனி அந்தப் பட்டத்தை எங்கும் பயன்படுத்தக்கூடாது. அந்தப் பதக்கத்தை மாநில அரசின் செயலகத்திடம் மீண்டும் ஒப்படைக்க வேண்டும் என சலேஹுடின் சொன்னார்.

spot_img

latest articles

explore more