Homeமலேசியாநம் இளைஞர்களுக்கு சாதனையாளர்களைக் காட்ட வேண்டும் ! குறைகளை மட்டும் பேசிக் கொண்டிருப்பது பின்னடைவையே தரும்...

நம் இளைஞர்களுக்கு சாதனையாளர்களைக் காட்ட வேண்டும் ! குறைகளை மட்டும் பேசிக் கொண்டிருப்பது பின்னடைவையே தரும் ! – டத்தோ ஶ்ரீ சரவணன்

பிரிக்ஃபீல்ட்ஸ் | 16/9/2021 :-

சமுதாயம் மேம்பாடு அடைய இளைஞர்களின் பங்கு மிக முக்கியம். அவர்களுக்குச் சாதனையாளர்களையே அதிகமாகக் காட்ட வேண்டும். குறைபாடுகளை மட்டுமே பேசிக் கொண்டிருந்தால் எந்தப் பயனும் இல்லை. அது பின்னடைவுக்கு மட்டுமே வழி வகுக்கும் என டத்தோ ஶ்ரீ சரவணன் கூறினார்.

இன்று பிரிக்ஃபீல்ட்ஸ் லிட்டில் இந்தியாவில் நாட்டாமை வாழை இலை உணவகத்தின் இரண்டாவது கிளையைத் திறந்து வைத்தபோது மனிதவள அமைச்சரும் ம.இ.கா.வின் தேசியத் துணைத் தலைவருமான டத்தோ ஶ்ரீ சரவணன் அவ்வாறு கூறினார்.

கோவிட்-19 பெருந்தொற்றில் இருந்து நாம் இன்னும் முழுமையாக விடுபடவில்லை. இத்தொற்றின் அச்சத்திலேயே நாம் தொடர்ந்து இருந்துவிட முடியாது. எந்த நிலையிலும் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொண்டு அதனை நன்முறையில் செயல்படுத்தி வெற்றி காண்பதே சிறப்பு. அந்த வகையில் நாட்டாமை சன்வேயில் புகழ்பெற்ற நாட்டாமை வாழை இலை உணவகத்தின் இரண்டாவது கிளையைத் திறந்திருப்பது பாராட்டுக்குரியது. அவர்களுக்கு எனது வாழ்த்துகள்.

எங்கு சென்றாலும் தம்மிடம் தொழிலாளர் பற்றாக்குறையை பல முதலாளிகள் முன்வைப்பதாக கூறிய டத்தோ ஶ்ரீ சரவணன், இவ்வாண்டு தொடக்கம் முதல் 1.5 மில்லியன் வேலை வாய்ப்புகள் இன்னும் நிரப்பப்படாத நிலையில் இருப்பதாகக் குறிப்பிட்டார்.

தற்போதைய நிலவரத்தின்படி, MyFutureJobs திட்டத்தின் வழி 212,000 வேலை வாய்ப்புகள் இன்னும் மலேசியர்களால் பயன்படுத்திக் கொள்ளாமல் உள்ளன. இந்நிலை நீடிக்கின்ற சூழலில், வேறு வழியில்லாமல் தொழிலாளர் பற்றாக்குறை ஏற்படும் துறைகளைக் காப்பாற்ற வெளிநாட்டுத் தொழிலாளர் இறக்குமதியை நாட வேண்டியக் கட்டாயம் ஏற்படுகிறது.

எத்தனை காலம் தான் அந்த வேலை வாய்ப்புகளைத் தமது தரப்பு பிடித்து வைத்திருக்க முடியும் என அவர் சொன்னார்.

தமது முன்னுரிமை மலேசியர்களுக்கே எனத் தெரிவித்த அவர், வேளாண்மை, சேவை, உற்பத்தி உட்பட பெருன்பான்மைத் துறைகள் தொழிலாளர் பற்றாக்குறையால் சிரமப்பட்டுக் கொண்டு இருப்பதாகக் குறிப்பிட்டார்.

எனவே, வேலையில்லாத மலேசியர்கள் இந்த வாய்ப்பினை நன்கு பயன்படுத்திக் கொள்வது சிறப்பான ஒன்று.

கடந்த ஆண்டு மலேசிய விடுதலை நாளில் சன்வேயில் நாட்டாமை வாழை இலை உணவகம் தொடங்கப்பட்டது. அதனை டத்தோ ஶ்ரீ சரவணன் திறந்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

May be an image of 1 person, standing, brick wall and text that says "TO HONOUR MURUGAN OUR RESPECTED AND AHUMBL HONOURABLE SARAVANAN GUEST YBDATUK SERI RESOURCES OF MINISTER OF HUMAN GRAND OFFICIAL LAUNCH naaramar GRASING ND BANANA LEAF BISTRO @BRICKFIELDS DATU' MINIST MALAYSIA RECORDE AVANAN ORCES LALAYSIA'S PSTERCONCE N"

இப்போது அதன் இரண்டாவது கிளை பிரிக்ஃபீல்ட்ஸ் லிட்டில் இந்தியாவில் முருகன் ஸ்டோர் எதிர்புறம் திறக்கப்பட்டுள்ளது.

ஓராண்டு காலத்தில் இரண்டாவது கிளை உணவகம் திறக்கப்பட்டது குறித்து பேசிய அதன் உரிமையாளர் டத்தோ ஈஸ்வரன், எந்தக் கெட்டச் சூழலிலும் ஒரு நல்லது இருக்கும், அதனை நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனக் கூறினார்.

வணிகத் துறையில் புத்தாக்கம் மிக மிக அவசியம். அந்த வழித்தடத்தில் பல பிரியாணி இருக்கின்ற போது புது முயற்சியாக செம்பு பிரியாணி நாட்டாமை உணவகத்தில் வழங்குகிறோம். பாரம்பரிய உணவுகளை BISTRO வகை சூழலில் வழங்குகிறோம். இரண்டு வெவ்வேரு சிந்தனைகளை ஒரு கலவையாகக் கொடுப்பது என்பது நாட்டாமை வாழை இலை உணவகத்தில் தனித்தன்மை, அந்தத் தனித் தன்மையும் புத்தாக்கமும் தான் எங்கள் வெற்றியின் அடித்தளம்.

உணவகத் துறையில் மட்டும் இல்லாமல் அதே முறையை எல்லா இடங்களில் பயன்படுத்துவது வெற்றியடையச் செய்யும் என டேவான் பாகாசா டான் புஸ்தாக்காவில் மொழி வல்லுநராகவும் மூன்ஷி டேவான் ஆகவும் இருக்கும் டத்தோ ஈஸ்வரன் குறிப்பிட்டார்.

நாட்டாமை வாழை இலை உணவகத்தில் 18 வகையான பிரியாணி வகைகளைக் கொண்டு பிரியாணித் திருவிழா, 25 வகையான இரசங்களைக் கொண்டு இரசத் திருவிழா, பழைய பாரம்பரிய சமையல் உணவுகளைக் கொண்டு பாட்டி சமையல் என ஒவ்வொரு மாதமும் ஒரு சிறப்பு அங்கம் நாட்டாமை வாழை இலை உணவகத்தில் ஏற்பாடு செய்யப்படும் என டத்தோ ஈஸ்வரன் மேலும் சொன்னார்.

spot_img

latest articles

explore more