Homeவர்த்தகம்அடுத்தாண்டு முதல் ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகத்திற்குக் கூட்தலாக ரிம 5 மில்லியன் ! – இந்தியர்களுக்கு நல்ல...

அடுத்தாண்டு முதல் ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகத்திற்குக் கூட்தலாக ரிம 5 மில்லியன் ! – இந்தியர்களுக்கு நல்ல செய்தி சொன்ன பிரதமர்

கோலாலம்பூர் | 12/12/2021 :-

சுங்கை பட்டாணியில் எம்.ஐ.இ.டியின் கீழ் இயங்கும் ஏய்ம்ஸ்ட் மருத்துவப் பல்கலைக்கழகத்திற்கு ரிம 5 மில்லியன் நிதி கூடுதலாக வழங்கப்படும் எனவும் அடுத்தாண்டு முதல் அது ரிம 25 மில்லியனாக அதிகரிக்கப்படுகிறது என இந்தியர்களுக்கான மிகவும் இனிப்பான செய்தியை பிரதமர் டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் அறிவித்தார்.

தகுதி பெற்ற இந்திய மாணவர்கள் தங்களின் மருத்துக் கல்வியை மேற்கொள்ள இந்தக் கோரிக்கையை ம.இ.கா.வின் தலைவர் தான் ஶ்ரீ விக்னேஸ்வரனின் பிரதமரிடன் முன் வைத்ததாகவும் அதற்கு தாம் சம்மதம் தெரிவித்திருப்பதாகவும் இன்று ம.இ.கா. தேசியப் பேராளர் மாநாட்டிற்கு சிறப்பு வருகை புரிந்த பிரதமர் கூறினார்.

மேலும், இந்திய சமுதாய மேம்பாட்டின் முன்னேற்றத்திற்காக அமைச்சரவையில் சிறப்பு செயற்குழுவை உருவாக்குவதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

ஒருமைப்பாட்டு அமைச்சின் வாயிலாக, மலேசிய இந்தியர் மேம்பாட்டுத் திட்ட வரைவு எனப்படும் Malaysian Indian Blueprint உருவாக்கப்பட்டிருப்பதாகவும் அதனை மிக விரைவில் தாம் அறிமுகம் செய்ய இருப்பதாகவும் அதில் குறுகிய கால, நீண்ட காலத் திட்டங்களை செயல்படுத்தவும் சித்தமாக இருப்பதாகவும் அவர் கூறினார்.

அதே சமயம், பி40 மக்களுக்காக ரிம 8,4 நேரடி உதவி நிதியும் மைக்ரோ, சிறு, நடுத்தர வணிகங்களுக்கான GKP உதவி நிதி ரிம 1 மில்லியன் நிதியும் வழங்கப்படுவதாக அவர் அறிவித்தார்.

அதனைத் தொடர்ந்து, மலேசிய இந்தியர் உருமாற்றத் திட்டப் பிரிவான மித்ராவுக்கு ஆண்டுதோறும் ரிம 100 மில்லியன் நிதியும், தெக்குன் வாயிலாக இந்தியர்களுக்கான மைக்ரோ தொழில்முனைவர் கடனுதவித் திட்டத்திற்கு ரிம 25 மில்லியன் நிதியும் வழங்கப்படுவதாகவும் பிரதமர் அறிவித்தார். அதன்படி, ஆண்டுக்கு 4% குறைந்த வட்டியுடன் ரிம 100,000 வரை விண்ணப்பிக்க இயலும் என்பதனையும் அவர் விளக்கினார்.

தவிர, பி40 இந்திய இளைஞர்களுக்கானத் தொழில் திறன் பயிற்சிக்காக மனிதவள அமைச்சின் கீழ் செயல்பட்டு வரும் மனிதவள மேம்பாட்டு நிறுவனமான HRD Corp வாயிலாக ரிம 25 மில்லியன் ஒதுக்கப்படுகிறது.

கல்வி அமைச்சின் வாயிலாக, தமிழ்ப்பள்ளிகளின் சீரமைப்புப் பணிகளுக்காக ரிம 35 மில்லியன் நிதியும் ஒதுக்கப்படுகிறது.

இவ்வாண்டு தமிழ், சீன, இதரப் பள்ளிகளுக்கு சரி சமமாக தலா ரிம 35 மில்லியன் ஒதுக்கப்படுவதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.

spot_img

latest articles

explore more