கோலாலம்பூர் | 13/12/2021 :-
அரசாங்கம் விதித்த கோவிட்-19 எஸ்.ஓ.பி.யை அரசாங்கமே மீறி இருப்பது அதன் நம்பகத்தன்மையைப் பாதிக்கும் என சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுதீன் தெரிவித்தார்.
பெருந்தொற்று காலத்தில் அரசாங்கத்திற்கு மிக முக்கியமாகத் தேவைப்படுவது நம்பகத்தன்மை.
தாம் விதித்த எஸ்.ஓ,பி,யை அரசாங்கமே மீறும்போது, அது மக்களிடத்தில் நம்பகத்தன்மை பாதிப்பை ஏற்படுத்தும் என அவர் சொன்னார்.
அரசாங்கம் இவ்வாறு நடந்து கொண்டால் நிச்சயம் எஸ்.ஓ.பி.யை மக்கள் புறந்தள்ளக்கூடும் என ரெம்பாவ் நாடாளுமன்ற உறுப்பினருமான கைரி குறிப்பிட்டார்.
கடந்த 10ஆம் நாள், மலேசியக் குடும்பம் 100 நாட்கள் அடைவுநிலை நிகழ்ச்சியில் கூடல் இடைவேளியை நிலைநாட்டாத ஏற்பாட்டாளருக்கு ரிம 1,000 தண்டம் விதிக்கப்பட்டது.


