Homeமலேசியாஐஜேஎநில் அனுமதிக்கப்பட்டார் துன் மகாதீர் !

ஐஜேஎநில் அனுமதிக்கப்பட்டார் துன் மகாதீர் !

கோலாலம்பூர் | 16/12/2021 :-

முன்னாள் பிரதமரும் பெஜுவாங் கட்சியின் தலைவருமான துன் டாக்டர் மகாதீர் இன்று தேசிய இதயக் கழகமான ஐஜேஎன்-இல் அனுமதிக்கப்பட்டார்.

இலங்காவித் தீவின் நாடாளுமன்ற உறுப்பினருமான துன் மகாதீர், இரவு 7.00 மணிக்கு அவர் ஐஜேஎன்-க்கு வந்தார் எனவும் அவர் முழு மருத்துவப் பரிசோதனையை மேற்கொள்வார் என அந்த மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டது.

அடுத்த சில நாட்களுக்கு அவர் இங்கு அனுமதிக்கப்படுவார் எனவும் அதில் குறிப்பிடப்பட்டது.

96 வயது மிக்க துன் மகாதீர் கடந்த 1989 ஆம் ஆண்டிலும் 2006 ஆம் ஆண்டிலும் மாரடைப்பு எற்பட்டிருந்தது.

அவரது இதய நோய்க்கு ஐஜேஎன்-இல் தான் சிகிச்சை பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

spot_img

latest articles

explore more